About

Tuesday, 19 October 2010

ஆசிரியர் பயிற்றுநர் பணி : ஒரே நாளில் 1,036 ஆசிரியர்கள் திடீரென பணி நியமனம்

சென்னை:பெரும் குளறுபடிகளுக்குப் பின், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர்களில், 1,036 பேர் திடீரென நேற்று ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 

Saturday, 16 October 2010

தேர்தல் எதிரொலி : டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்

சென்னை : "டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி முடிவடையும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது. 


Thursday, 14 October 2010

ஆசிரியர் பயிற்றுநர் பணி : தமிழ் , தாவரவியல் , புவியியல் பணியிடத்திற்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு

சென்னை : சென்னை, மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் பணி நியமனத்திற்கான ( தமிழ் , தாவரவியல் , புவியியல் ) தற்காலிக தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 13-10-2010 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது .   

Monday, 11 October 2010

2010-2011 ஆண்டிற்கான 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயார்

சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க உள்ளனர். கூடுதல் பணியிடங்களில் தேவைப்படுவோரை நியமிக்க சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வாங்கியுள்ளது. 

Wednesday, 6 October 2010

சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

             சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 06-10-2010 மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

Monday, 4 October 2010

ஐகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு

மதுரை, அக். 4:
                          
             ஐகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் பணி கிடைக்காமல் ஆயிரம் ஆசிரியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
                             

Sunday, 3 October 2010

தமிழகத்தில் கட்டாயக் கல்வி சட்டம் அமல் : 15 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க திட்டம்

கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்த தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் 15,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, விரைவில் 15,000 ஆசிரியர்கள் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது

Wednesday, 22 September 2010

போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனத்திற்கு போராடும் பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலை :

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி,
தேர்வெழுதியவர்கள் 20.09.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Wednesday, 15 September 2010

நடப்பாண்டில் நியமிக்க வேண்டிய 11 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி விறுவிறுப்பு

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள் 5,300 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2,500 பேர் மற்றும் 500 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்து 800 ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

Thursday, 9 September 2010

இடைநிலை கல்வி திட்டத்தில் 45,850 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டம்

              இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2017ம் ஆண்டுக்குள் 45,850 ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பங்களிப்புடன் இடைநிலைக் கல்வித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.



Wednesday, 1 September 2010

4,709 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் : தொடக்க கல்வித்துறை கவுன்சிலிங் அறிவிப்பு

தொடக்க கல்வித் துறைக்காக தேர்வு செய்யப்பட்ட 4,709 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் சேலத்தில் பணி நியமன கவுன்சிலிங் நடக்கிறது.


Friday, 20 August 2010

BRTE EXAM 2009-10 : REVISED 8 KEY ANSWERS IN RESP. SUBJECTS ACCORDING TO COURT JUDGEMENT

 

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய, கோர்ட் உத்தரவு

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணிக்கான தேர்வு எழுதிய அனைவரின் விடைத்தாளையும் மறுமதிப்பீடு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 



Wednesday, 18 August 2010

பள்ளி கல்வி துறையில் 2,723 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,723 ஆசிரியர்கள், அடுத்த வாரம் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஏற்கனவே 1,924 பட்டதாரி ஆசிரியர்கள், 799 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். இவர்களை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணி நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், அடுத்த வாரம் சென்னையில் நடக்கிறது.

நன்றி   :  தினமலர்


Thursday, 12 August 2010

தொடக்கக்கல்வி துறையில் 707 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு அறிவிப்பு

தொடக்கக் கல்வித் துறையில் ஒதுக்கீடு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்காக ஈரோட்டில் ஆகஸ்ட் 20-ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Saturday, 31 July 2010

RMSA கல்வி திட்டத்திற்கு 1400 ஆசிரியர் நியமனம் மேலும் ஓர் அறிவிப்பு !


மதுரை:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், விரைவில் 1,400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, மாநில திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, 28 July 2010

சிறப்பு பாடப் பிரிவு, இடைநிலை கல்விக்கு விரைவில் ஆசிரியர்கள் தேர்வு

 சென்னை, ஜூலை 26: அரசு பள்ளிகளில் சிறப்பு பாட பிரிவுகளில் 1,314 ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 ஆசிரியர்களும் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரசு பள்ளிகளில் சிறப்பு பாடப் பிரிவுகளில் இசை பாடத்தில் 95 ஆசிரியர்களும், தையல் பாடப் பிரிவில் 135, ஓவியத்தில் 231, உடற்கல்வியில் 853 ஆசிரியர்கள் என 1,314 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

1603 ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு !

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், 1603ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று ( 27-07-2010 )வெளியிட்டது. 

ஆசிரியர் தேர்வு வாரிய சுட்டி இங்கே 






Thursday, 15 July 2010

தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று ( 14-07-2010 )வெளியிடப்பட்டது.

Please click Here for DSE - Department - Tamil and History



Tuesday, 13 July 2010

தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் 6500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 503 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணையை தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Monday, 12 July 2010

அங்கீகாரம் பெறாத மையங்களில் படித்து பாதிக்கப்பட்ட 7000 இடைநிலை ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கூட்டமைப்பு கோரிக்கை !

பாதிக்கப்பட்ட வேலையில்லாத 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

Saturday, 10 July 2010

ஆறு பாடப்பிரிவை சேர்ந்த 3,871 பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு :

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று வெளியிட்டது. 6,503 பேரில், முதல் கட்டமாக 3,871 பேரின் பெயர் பட்டியலை பாட வாரியாக அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,503 பட்டதாரி ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. 

Friday, 25 June 2010

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வின் KEY ANSWER வெளியீடு !

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வின் அனைத்து பாடங்களுக்கும் KEY ANSWER ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடபட்டுள்ளது

LINK IS  CLICK HERE

Wednesday, 23 June 2010

நியமன ஆணையை எதிர்பார்க்கும் பட்டதாரி ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களால் கல்வித்தரம் பாதிப்பு

ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 1,122 பேர் பல மாதங்களாகப் பணி நியமன ஆணையை
எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

Saturday, 12 June 2010

15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசு நடவடிக்கை

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம், 14 ஆயிரத்து 900 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 6,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி முடிந்த நிலையில், அடுத்ததாக 6,300 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Wednesday, 9 June 2010

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியீடு !

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 921 முதுகலை ஆசிரியர்கள், வேலை வாப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செயும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வந்தது. தகுதி வாந்தவர்கள் அழைக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொண்டவர்கள்,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.nic.in  மூலம் தெரிந்துகொள்ளலாம் .

Friday, 4 June 2010

உதவிப் பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு !

உதவிப் பேராசிரியர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.


Saturday, 29 May 2010

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணி ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை : வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 வட்டார வள மைய பயிற்றுனர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது. பணி நாடுனர்களின் திருத்திய பட்டியல், கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வாகியுள்ள பணி நாடுனர்களுக்கு, வரும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.

Friday, 28 May 2010

தொடக்க கல்வி துறையில் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு பரிந்துரை !

அரசு நடுநிலை பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர் பணி இடங்களை பதவி உயர்வு மட்டுமின்றி நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பலாம் என அரசுக்கு தொடக்க கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது  (  இதுவரை தொடக்க கல்வி துறையில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர் பணி இடங்கள் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமே நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது )

மேலும் தகவல் அறிய  தினத்தந்தி சுட்டி இங்கே ...

Tuesday, 18 May 2010

ஆசிரியர், மாணவர் விகிதத்தில் மாற்றம் : கல்வித்துறை திட்டம்

தொடக்க, நடுநிலைபள்ளிகளில் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு நடந்து வருகிறது.

Sunday, 16 May 2010

ஆயிரக்கணக்கில் காலிப் பணியிடம்: தமிழாசிரியர்கள் வருத்தம்


தமிழக அரசு பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் அதிக அளவில் காலியாக உள்ளது. தமிழக பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் மொழிப் பாடங்களில் அதுவும் தாய்மொழியான தமிழ் பாடங்களுக்கு தருவதில்லை என்பது தமிழாசிரியர்களின் வருத்தம். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி நிலையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நிலையிலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன.

Thursday, 13 May 2010

இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் தகவல்


''தமிழகம் முழுவதும் 1,700 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். தற்போது நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் முடிந்தவுடன் உடற்கல்வி, தையல், இசை, ஓவிய ஆசிரியர் பணி நியமனம் நடத்தப்படும்,'' என்று ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.
கோவையில் நடந்த பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் சங்கர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை மற்றும் அரசு சார்ந்த சிறப்பு கல்வி நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 32 மாவட்ட ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை தொகுக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். 

 மேலும் படிக்க தினமலர் சுட்டி click here

நன்றி   -    தினமலர்

Wednesday, 12 May 2010

6,322 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் : இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆரம்பம்:மீண்டும் வாய்ப்பு கிடையாது

தமிழகத்தில் விரைவில் நியமிக்கப்படும் 6,322 பட்டதாரி ஆசிரியர்களுக்குஇன்று (12ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்புபணி நடக்கிறது. சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்குமீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம்உத்தரவிட்டுள்ளது.


Tuesday, 11 May 2010

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : முதல்வருக்கு கோரிக்கை

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தொடக்கப்பள்ளி தவிர மொத்தம் 14 ஆயிரத்து 956 பள்ளிகளில் 6 ஆயிரத்து 787 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக கருதப்படுகிறது. 

நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கல்வித் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்





அரசு நடுநிலைப்பள்ளிகளில் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்கல்வியை வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.





Monday, 10 May 2010

விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி தேவை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தர வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. இவர்களுக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) பெற்றிருக்க வேண்டும் அல்லது முது கலைப் பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மற்றும் பிஎச்.டி., பெற்றிருக்க வேண்டும்.


இதன்படி, 1993ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் எம்.பில்., பட்டம் பெற்றவர் களுக்கு, நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் விதிவிலக்கு கிடையாது. எனவே, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய "முதல் பெஞ்ச்&' விசாரித்தது. நளினி சிதம்பரம், வக்கீல் சுரேஷ் விஸ்வநாத் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "முதல் பெஞ்ச்&' இடைக்கால தடை விதித்தது. அப்பீல் மனுக்களுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நன்றி    - தினமலர்

Monday, 3 May 2010

GRADUATE ASSISTANTS 2009-10 CERTIFICATE VERIFICATION DETAILS RELEASED BY TRB

RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Teachers Recruitment Board was entrusted with the task of recruiting Graduate Assistant for Middle/High/Higher Secondary Schools for the year 2009-10 to be appointed in various departments viz. Directorate of School Education, Directorate of Elementary Education etc., based on employment exchange registration seniority. 

Teachers Recruitment Board has issued indents to the Commissioner of Employment and Training, Chennai-32 to sponsor the list of eligible candidates in the ratio of 1:5 for the subjects Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, History and Geography.

verify your seniority details click here

SUBJECT WISE CUT-OFF SENIORITY NOMINATED BY EMPLOYMENT OFFICE
 
click here to view the details

Sunday, 2 May 2010

ஆசிரியர் பயிற்றுனர் எழுத்துத் தேர்வு : 'கீ' விடைத்தாளை வெளியிடகோர்ட் உத்தரவு



ஆசிரியர் பயிற்றுனர் எழுத்துத் தேர்வு : 'கீ' விடைத்தாளை வெளியிட உத்தரவு

சென்னை : 'வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனருக்கான எழுத்துத் தேர்வின் கீ விடைத்தாளை, நிபுணர் குழு ஆய்வு செய்த பின், அந்த கீ விடைத்தாளை வெளியிட வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் தகவலுக்கு ... click here

6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நான்கு நாள் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது :

சென்னை : 'வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தகவலுக்கு ...  click here


நன்றி       :     தினமலர்

Thursday, 29 April 2010

6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, ஏப்.28: புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு, கடந்த 2009-ல் அறிவித்தது. 1:5 விகிதாசாரத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது.இந்த 32 ஆயிரம் பேருக்கு மே முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகளில் பணிக்குச் சேருவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.6,000 பணியிடங்களுக்காகப் பெறப்பட்டுள்ள 32 ஆயிரம் பேரின் மூப்பு அடிப்படையிலான பெயர் பட்டியல் h‌t‌t‌p:‌w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.அதேபோல முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்றவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கும் மே முதல் வாரத்தில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தில் சுமார் 8,900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.இதுதொடர்பான அரசாணை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி   :   தினமணி

Wednesday, 28 April 2010

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு புகார் எதிரொலி : 'KEY ANSWER' ஐ ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சரிவர திருத்தப்படவில்லை என அதிகமான புகார்கள் வந்ததையடுத்து, 'கீ ஆன்சரை' சரிபார்க்க நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி புதிய, 'கீ ஆன்சரை' வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்திற்காக 1,064 வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தியது. இதில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 'அப்ஜக்டிவ்' வகையில், பாடத்திற்கு 110 மதிப்பெண்கள், கல்விக்கு 30 மதிப்பெண்கள் மற்றும் பொது அறிவு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் கள் மதிப்பீடு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்த்தலுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, கடந்த 2ம் தேதி, தனது இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தேர்வு முடிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மிகச் சரியான முறையில் விடை அளித்தும், எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, கணிதத்தை முக்கிய பாடமாகக் கொண்டு தேர்வெழுதியவர்களுக்கு, 20 முதல் 25 மதிப்பெண்கள் வரை குறைவாக வந்ததாக புலம்பினர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நூற்றுக்கணக்கானோர் புகார் தெரிவித்து, தங்களது விடைத்தாள்களை மீண்டும் சரிபார்த்து, முடிவை வெளியிட வேண்டும் என கோரினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில், கேள்விகளுக்குரிய, 'கீ ஆன்சரை' சரிபார்த்து, அறிக்கை வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'கீ ஆன்சரை' ஆய்வு செய்யும் பணியில், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விரைவில், தங்கள் அறிக்கையை, தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்படி புதிய, 'கீ ஆன்சரை' இணையதளத்தில் வெளியிட, தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்

Saturday, 24 April 2010

அரசு கல்லூரிகளில் 1024 ஆசிரியர்கள் நியமனம்:உயர்கல்வித் துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 60 சதவீதமும், பல்கலையில் 50 சதவீத அளவிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்லூரிகளில் மட்டும் 2,594 காலிபணியிடங்கள் இருக்கின்றன. பல்கலை, கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு பல சட்டபூர்வமான தடைகளை கடக்க வேண்டியுள்ளது. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1024 பேரை நியமிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்பணி இரண்டு மாதங்களில் நிறைவு பெற்று நியமனம் செய்யப்படுவர்.

 மேலும் படிக்க தினமலர் சுட்டி கீழே ... 

Wednesday, 21 April 2010

அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர் நியமிக்க அரசு முன் வர வேண்டும் : தமிழாசிரியர் கழக மாநிலத்தலைவர் வேண்டுகோள்

772 மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை அரசு உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரம், நடுநிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 300 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பணி நியமனத்தில் பதவி உயர்வு மூலம் 75 சதமும், 25 சதம் நேரடியாகவும் பணி நியமிக்கப்பட்டு வந்தது. இதில், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணி நியமனம் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்

மேலும் படிக்க தினமலர் சுட்டி ...

அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர் நியமிக்க அரசு முன் வர வேண்டும்  

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல்: ஏப்ரல் 29-க்குள் விண்ணப்பிக்கக் கெடு :

சென்னை, ஏப்.20: பணியிட மாறுதல் கோரும் பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் 

மேலும் படிக்க தினமணி சுட்டி ...

Tuesday, 20 April 2010

ஆசிரியர் பணி தேர்வு கேள்விகளுக்குரிய விடைகளை வழங்கக் கோரி ஐகோர்ட்டில் மனு ! விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா !

மதுரை : வட்டார வள ஆசிரியர் பணி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்குரிய சரியான விடைகளை வழங்கக் கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மேலும் தகவல் அறிய ... தினமலர் சுட்டி 


Saturday, 17 April 2010

2010-11 ஆண்டின் ஆசிரியர் நியமனம்

  • ''இந்த கல்வியாண்டில் மட்டும் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என தமிழக கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்
  •  2010 -11 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை - 1ல் 28 பணியிடங்கள் உட்பட முதுகலை ஆசிரியர்கள் 916 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,818 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 358 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,743 பேர், சிறப்பாசிரியர்கள் 68 பேர் என மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
  • 228 புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும். 218 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கு 2,412 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்
  • பணியில் இருக்கும் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியில் நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2010-11ம் ஆண்டில், 250 தகுதி வாய்ந்த நபர்கள் இளநிலை உதவியாளர்களாகவும், 27 பேர் தட்டச்சர்களாகவும் பணி அமர்த்தப்படுவர்

Friday, 16 April 2010

நட‌ப்பா‌ண்டி‌ல் 8,903 ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் பு‌திதாக ‌நியமன‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு



நட‌ப்பா‌ண்டி‌ல் அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் பு‌திதாக 8,903 ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ள் நேரடியாக ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று ப‌ள்‌‌ளி‌‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ள்‌ளி‌க் க‌ல்வித்துறை மா‌னிய‌க் கோ‌ரி‌க்கை ‌மீதான ‌விவாத முடி‌வி‌ல் இதனை அமை‌ச்‌ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு அ‌றி‌‌வி‌த்தா‌ர்.

திரு‌ப்பூ‌ர், பெர‌ம்பலூ‌ரி‌ல் பு‌தியதாக மாவ‌ட்ட தொட‌க்க க‌ல்‌வி அலுவலக‌ம் அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ஸ்ரீ‌வி‌ல்‌லிபு‌த்தூ‌ரி‌ல் மாவ‌ட்ட க‌ல்வி அலுவலகம் பு‌திதாக தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Thursday, 15 April 2010

சமச்சீர் கல்வி, கட்டாய கல்வி திட்டம் வெற்றிபெற 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர்

 தூத்துக்குடி, ஏப். 15
                                 சமச்சீர் கல்வி மற்றும் கட் டாய கல்வித் திட்டங்கள் மூலம் தரமான கல்வி கிடைத்திட மாணவர் & ஆசிரியர் விகிதம் மாற்றி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க ப்பள்ளிகளில் கடந்த 97ம் ஆண்டு வரை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் 29.12.1997 அன்று 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அர சாணை 525 பிறப்பிக்கப்பட்டது.இதற்கு அப்போதே பல்வேறு சங்கங்களும், ஆசிரிய கூட்டணியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசாணை ரத்து செய்யப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு முதல் இந்த அரசாணை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் ஆசிரியர் களின் எண்ணி க்கை பல மடங்கு குறைந்துவிட்டது. தமிழ் வழிக்கல்வியின் தரமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி அதிகரித்துள்ளது. ஏற்கனவே செயல்வழி கல்வி திட்டத்தால் ஆசிரியர்கள் கடும் பணி ச்சுமைக்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது மெட்ரிக்குலேசன் பயிலும் மாணவர்களின் தரத்திற்கு இணையான பாடத்தி ட்டத்தை சமச்சீர் கல்வி மூலம் வழங்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

                                      இத்திட்டத்தால் ஏழை மாணவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியிலேயே தரமான கல்வி கிடைக்கும் என்பதால் பலரும் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.அதேநேரத்தில் தரமான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள சூழ்நி லையில் கடினமானதாக இருக்கும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வரும் மாணவர் & ஆசிரியர் விகிதத்தை 1997க்கு முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

                         புதிதாக தொடக்கப் பள்ளிகளை தொடங்கு வதைவிட ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தர த்தை உயர்த்தி கூடுதலாக வகுப்பறைகள்,   சுகா தாரமான           கழிப் பறைகள், ஆரோக்கியமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரி க்கை விடுக்கி ன்றனர். 

கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு :
                        
                           இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சு.காசி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களைவிட ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் அதிகமாகும். இதனால் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மனஉளச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கல்வியின் தரமும் குறைந்து விட்டது. மாணவர்களிடம் ஒழுக்கமின்மையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் முழு பயனும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்பினால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையை ரத்து செய்து 1997க்கு முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசாணை ரத்து செய்தால் நல்லது ...
நன்றி : தமிழ் முரசு 

Thursday, 8 April 2010

ஆசிரியர் தேர்வு வாரிய விடைத்தாள் திருத்துவதில் குளறுபடியா? தேர்வில் பங்கேற்றோர் வேதனை

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை எழுதியவர்கள், விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்களாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 1056 பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க இத்தேர்வு, கடந்த பிப். 14ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஏப். 2ம் தேதி இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். பலர், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைவான மதிப்பெண்ணே வழங்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர். இத்தேர்வில் மொத்த மதிப்பெண் 150. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு வினாக்களுக்கு 110 மதிப்பெண்ணும், பொது அறிவுக்கு 10, கல்வி உளவியல் பாட வினாக்களுக்கு 30 மதிப்பெண்ணும் வழங்கப்படும். இத்தேர்வை பொறுத்தவரை, தேர்வு எழுதி முடிந்ததும் விடைத்தாளின் நகல் ஒன்று அவர்கள் கைவசமே இருக்கும். இதனால் தாங்கள் எழுதிய விடையை அவர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். அதன்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு 130 முதல் 140 வரை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 90 முதல் 100 வரையே கிடைத்துள்ளது.

இத்தேர்வுக்கென பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பலர் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிறுவனங்களிலும் பலர் எழுதிய விடைத்தாளை காட்டி திருத்தம் செய்திருந்தனர். அவர்களுக்கும் மதிப்பெண் குறைவாகவே வந்துள்ளது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''கணிதபாடத்தில் 110 மதிப்பெண்ணுக்கு மட்டுமே விடைத் தாளை திருத்தியுள்ளனர். மீதியுள்ள 40 மதிப்பெண்ணையும் விட்டுவிட்டனர் என தெரிகிறது. ஏனெனில் கணிதத் தேர்வு எழுதிய பெரும்பாலானோருக்கு அதிகபட்சமே 103 மதிப்பெண் வரைதான் கிடைத்துள்ளது. இதேபோல தமிழ்ப் பாடம் எழுதியவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளன,'' என்றார்.

தேர்வெழுதிய மற்றொருவர் கூறுகையில், ''நான் பயிற்சி பெற்ற மையத்தில் விடைத்தாள் மாதிரியை காட்டி திருத்தம் செய்தபோது, 130 மதிப்பெண் வரை கிடைக்கும் என்பதால், மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் 117 மதிப்பெண்ணே கிடைத்துள்ளது. இதனால் வெறுத்துவிட்டேன். இதேபோல பலர் குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இதனால் பலர் கோர்ட்டுக்கு செல்லும் முடிவில் உள்ளோம்,'' என்றார்.

THANKS TO :   DINAMALAR

Sunday, 31 January 2010

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதிவு மூப்பில் குளறுபடியால் வேதனை

பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்பில், குளறுபடிகள் உள்ளதால், பதிவுதாரர்கள் வேதனையில் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு பட்டியலை கேட்கிறது. இதற்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும், பதிவு மூப்பு உள்ள பட்டதாரி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து, பதிவு உறுதி செய்த பின், வேலை வாய்ப்பு இணையதளத்தில் பட்டியலை வெளியிடுகிறது.
 பதிவு செய்தவரே நேரடியாக பதிவை உறுதி செய்த பின்னரும், அவரது பதிவு மூப்பு இணையதளத்தில் இல்லை. இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களை அணுகினால், இன்னும் கால அவகாசம் உள்ளது; அதற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கின்றனர்.
இணையதளத்தில் சமூக அறிவியல் பாடம் இல்லை; சமூக அறிவியல் பாடத்திற்கான பதிவு மூப்பு, சில நாட்களாக வந்து கொண்டிருந்தது. தற்போது முற்றிலுமாக இல்லை. பதிவு மூப்பு உள்ளவர்கள் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டருக்கும், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கும் நடையாக நடந்து வருகின்றனர்.
தமிழாசிரியர் பதிவு மூப்பில் குளறுபடி: பட்டதாரி தமிழாசிரியர் பதிவு மூப்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் குழப்புகிறது. 2009 செப்டம்பரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில், பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பதிவு மூப்பு 1995 மே 22ம் தேதி என உள்ளது. 2009 டிச., 8ம் தேதி அறிவிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண்களுக்கான ஒதுக்கீட்டில் 1993 செப்., 9ம் தேதி வரை பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு மூப்பு பின்னோக்கி செல்வதால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால்,  பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காக காத்திருப்பவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

Thursday, 28 January 2010

நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி ! ! !

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில், யு.ஜி.சி., நிதியுதவியுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு நெட், ஸ்லெட் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த வகுப்புகள்,  வரும் பிப்., 6ம் தேதி துவங்க உள்ளன. முதுகலை இரண்டாம் ஆண்டு, எம்.பில்., படிக்கும், படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் பெயர், முகவரி, ஜாதிச்சான்று, வருமான சான்று, போன் எண், தேர்வு எழுத விரும்பும் பாடம், போன்ற தகவல்களுடன், ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு, 0452- 245 6100 ல் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் சின்னையா தெரிவித்துள்ளார்.