About

Wednesday, 22 September 2010

போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனத்திற்கு போராடும் பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலை :

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி,
தேர்வெழுதியவர்கள் 20.09.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




ஆசிரியர் தேர்வு வாரியம், எஸ்.எஸ்.ஏ.,
இயக்ககத்திற்காக, 1,064 வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை, கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடத்தியது. இதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 541 பேர் கலந்து கொண்டனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முடிவுகளைப் பார்த்த பலரும், எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் மிகக் குறைவாக வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போரட்டத்தின் போது பங்கேற்றோரில் ஒரு பகுதி


தமிழ், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வெழுதியவர்கள்,
மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகவும், மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும்
என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வலியுறுத்தினர். இந்த பிரச்னை
தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் சிலர் வழக்கும் தொடர்ந்தனர்.  இதையடுத்து, பாட வாரியாக நிபுணர் குழுவை அமைத்து, தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல் ஆகிய ஆறு பாடங்களின், "கீ-ஆன்சரை' மீண்டும் சரிபார்த்து மதிப்பீடு செய்ய, தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. இந்தப் பணிகள் முடிந்ததும், மீண்டும் தேர்வுப் பட்டியலை திருத்தி புதிய பட்டியலை (இரண்டாவது முறையாக) வெளியிட்டது. இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க செல்லும் முன்


இதனிடையே, முதல் தேர்வுப் பட்டியலில் தேர்வான 300க்கும் மேற்பட்டோர், இரண்டாவது பட்டியலில் இடம் பெறாததைக் கண்டதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் எட்டு கேள்விகள் மற்றும் அது தொடர்பான விடைகளில் பிரச்னை இருப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்  எட்டு கேள்விக்கும் மறுமதிப்பீடு செய்து இரு வாரத்திற்குள் முடிவை வெளியிடவேண்டும் என தீர்ப்பு வழங்கியது . முடிவே வெளியிடப்படாத நிலையில் , மறுமதிப்பீட்டை நிறுத்தவும் மேலும் தேர்வை ரத்து செய்யவும் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர் . வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டபின் தான் பணிநியமனத்தை தொடங்குவோம் என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது  . போட்டித் தேர்வு நடந்து, ஏழு மாதங்கள் ஆன நிலையிலும், இந்த பிரச்னை இன்னும் தீரவில்லை. இந்நிலையில், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடக்கோரி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் நேற்று காலை திடீரென ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் வசந்தி, சிலரை அழைத்து, பிரச்னையைக் கேட்டறிந்தார். அவர் கூறும் போது, "இந்த பிரச்னையில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை என்ன உத்தரவிடுகிறதோ, அதை உடனடியாக அமல்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருக்கிறது '' என்றார்.


9 comments:

  1. மறுதேர்வு வைப்பது மட்டுமே சிறந்த முடிவாகும் .... தவறான கேள்வி கொடுத்து அவர்களின் நேரத்தையும் மனதையும் குழப்பி விட்டார்கள் ... மறுதேர்வு மட்டுமே சிறந்தது ......இதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் திறமையான ஆசிரியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

    ReplyDelete
  2. ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு முடிவு வரும் திங்கள் அல்லது செவ்வாய் (5-10-2010) வெளியிடபடும் என எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
  3. how one can ask for re examination? those who need re examination can appear in next trb.we are looking forjustice who has been slected in this examiination

    ReplyDelete
  4. jegan அவர்களுக்கு மறுதேர்வு வைத்தால்மடும் மீண்டும் இதே நிலை வராது என்பதற்க்கு என்ன உத்தரவாதம்.எத்தனை முறைவேண்டுமாலும் தேர்வுத்தால் திருத்தட்டும் திறமையானவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவர்கள்.மறுதேர்வு வைக்கும் அளவுக்கு இதில் எந்த தவறும் நடக்கவில்லை. நன்றி!

    ReplyDelete
  5. i fully agree with vijayalakshmi's opinion

    ReplyDelete
  6. any alteration for 3 list

    ReplyDelete
  7. I AGREE WITH MR.SENTHIL OPINION. BUT NOW WE EXPECT THE FINAL SELECTION LIST FROM TRB. TRB WILL TAKE NECESSARY ACTION IMMEDIATELY. DURAI

    ReplyDelete
  8. What is the present status of BRTE?, If anyone knows please inform here

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.