About

Saturday 31 July, 2010

RMSA கல்வி திட்டத்திற்கு 1400 ஆசிரியர் நியமனம் மேலும் ஓர் அறிவிப்பு !


மதுரை:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், விரைவில் 1,400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, மாநில திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 28 July, 2010

சிறப்பு பாடப் பிரிவு, இடைநிலை கல்விக்கு விரைவில் ஆசிரியர்கள் தேர்வு

 சென்னை, ஜூலை 26: அரசு பள்ளிகளில் சிறப்பு பாட பிரிவுகளில் 1,314 ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 ஆசிரியர்களும் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரசு பள்ளிகளில் சிறப்பு பாடப் பிரிவுகளில் இசை பாடத்தில் 95 ஆசிரியர்களும், தையல் பாடப் பிரிவில் 135, ஓவியத்தில் 231, உடற்கல்வியில் 853 ஆசிரியர்கள் என 1,314 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

1603 ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு !

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், 1603ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று ( 27-07-2010 )வெளியிட்டது. 

ஆசிரியர் தேர்வு வாரிய சுட்டி இங்கே 






Thursday 15 July, 2010

தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று ( 14-07-2010 )வெளியிடப்பட்டது.

Please click Here for DSE - Department - Tamil and History



Tuesday 13 July, 2010

தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் 6500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 503 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணையை தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Monday 12 July, 2010

அங்கீகாரம் பெறாத மையங்களில் படித்து பாதிக்கப்பட்ட 7000 இடைநிலை ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கூட்டமைப்பு கோரிக்கை !

பாதிக்கப்பட்ட வேலையில்லாத 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

Saturday 10 July, 2010

ஆறு பாடப்பிரிவை சேர்ந்த 3,871 பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு :

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று வெளியிட்டது. 6,503 பேரில், முதல் கட்டமாக 3,871 பேரின் பெயர் பட்டியலை பாட வாரியாக அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,503 பட்டதாரி ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.