About

Saturday 31 July, 2010

RMSA கல்வி திட்டத்திற்கு 1400 ஆசிரியர் நியமனம் மேலும் ஓர் அறிவிப்பு !


மதுரை:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், விரைவில் 1,400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, மாநில திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் கருணாகரன், இணைஇயக்குனர் கார்மேகம் ஆகியோர் கூறியதாவது:இத்திட்டம் ஓராண்டாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலரும், கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில் உதவி திட்ட அலுவலராக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கல்வி ஆண்டில், புதிதாக 200 உயர்நிலைப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. விரைவில், இத்திட்டத்தின் கீழ் 1400 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், இந்த ஆண்டே இவர்கள் நியமிக்கப்படுவர். இத்திட்டத்தில், பள்ளிகளுக்கு கட்டட வசதிக்காக ரூ. 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் வகுப்பறைகள், ஆய்வுக் கூடம், கம்ப்யூட்டர் ஆய்வகம், நூலகம் ஆகியவை இடம்பெறும். இத்திட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக பயிற்சி அளிக்கப்பட்டு, 9, 10ம் வகுப்பு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுத்தப்படும். முதற்கட்டமாக, தமிழகத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும், தொடர் செலவினமாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக, 26 மாதிரி பள்ளிகள் துவக்கப்பட உள்ளன. அதற்காக மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் என்றனர்.

நன்றி  : தினமலர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.