தமிழகத்தில் விரைவில் நியமிக்கப்படும் 6,322 பட்டதாரி ஆசிரியர்களுக்குஇன்று (12ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்புபணி நடக்கிறது. சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்குமீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம்உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் 6,322 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட உள்ளனர். இதற்காக 1:5 என்ற வீதத்தில் மாநிலவேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில்தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக அழைப்பு கடிதம் அனுப்பபட்டுள்ளது.தமிழகத்தில்அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 31 ஆயிரத்து 170 பேருக்குஅந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில்சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக பல்வேறுகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் பாடத்திற்கு 206, ஆங்கிலம் 1,625, கணிதம் 1,382, இயற்பியல் 857 , வேதியியல் 856, தாவரவியல் 367, விலங்கியல் 367, வரலாறு 550, புவியியல் 122 ஆகிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தசான்றிதழ் சரி பார்ப்பு பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி மார்க் சான்றிதழ், பிளஸ் 2 மார்க் சான்றிதழ், இளங்கலை பட்டம், கல்வியியல் கல்வி பட்டம், சாதிசான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், 3 போட்டோக்கள் கொண்டு வரவேண்டும். மேலும், அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் 2 செட் தனியாக கொண்டு வர வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சான்றிதழ் சரி பார்ப்புக்கு அசல்சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும், பின்னர்ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்கவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரி பார்ப்புக்கான அழைப்பு கடிதம் வேலைவாய்ப்புக்கானஉத்தரவாதம் அல்ல என்றும், குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில்சான்றிதழ் சரி பார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் வரவில்லை எனில்அவர்களுக்கு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பணி நாடுனர்களின் தகுதி குறித்துஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானதாகும், தற்போதுசான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டவர் ஏற்கனவே பணிக்குதேர்வு செய்யப்பட்டவராக இருக்க கூடாது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
sir, 2010-2011ம் கல்வி ஆண்டின் இடைநிலை ஆசிரியர் நியமனம் எப்பொழுது?
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் நியமனம் சான்றிதல் சரி பார்ப்பு பற்றிய தகவல் எப்போது வெளியிடப்படும்?