சென்னை, ஜூலை 26: அரசு பள்ளிகளில் சிறப்பு பாட பிரிவுகளில் 1,314 ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 ஆசிரியர்களும் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரசு பள்ளிகளில் சிறப்பு பாடப் பிரிவுகளில் இசை பாடத்தில் 95 ஆசிரியர்களும், தையல் பாடப் பிரிவில் 135, ஓவியத்தில் 231, உடற்கல்வியில் 853 ஆசிரியர்கள் என 1,314 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தலா 200 ஆசிரியர்களும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகியவற்றில் தலா 100 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்த 31,000 பேர்களில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதாவது, அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என அனைத்து பாடங்களிலும் 6,300 ஆசிரியர்களைத் தேர்வு செய்ய சுமார் 31,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 6,300 பேர் தேர்வு செய்யப்பட்டது போக மீதியுள்ளவர்களைக் கொண்டு சிறப்பு பாடப் பிரிவு ஆசிரியர்கள், இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. பொதுவாக, இப்படி செய்யக் கூடாது. ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப 1:5 என்ற விகிதத்தின்படியே ஆசிரியர்களை அழைக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற முடியவில்லை.

நன்றி : தினமணி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.