2010-11 ஆண்டின் ஆசிரியர் நியமனம்
- ''இந்த கல்வியாண்டில் மட்டும் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என தமிழக கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்
- 2010 -11 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை - 1ல் 28 பணியிடங்கள் உட்பட முதுகலை ஆசிரியர்கள் 916 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,818 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 358 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,743 பேர், சிறப்பாசிரியர்கள் 68 பேர் என மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
- 228 புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும். 218 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கு 2,412 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்
- பணியில் இருக்கும் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியில் நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2010-11ம் ஆண்டில், 250 தகுதி வாய்ந்த நபர்கள் இளநிலை உதவியாளர்களாகவும், 27 பேர் தட்டச்சர்களாகவும் பணி அமர்த்தப்படுவர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.