About

Saturday, 16 October 2010

தேர்தல் எதிரொலி : டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்

சென்னை : "டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி முடிவடையும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது. 




மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்காக 5,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்காக 900 முதுகலை ஆசிரியர்கள், தொடக்க கல்வித்துறை பள்ளிகளுக்கு 1,800 இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 835 பேர், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 175 பேர் என மொத்தம் 9,850 ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் இருந்து 6,200 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். முதுகலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை.  அதனால், வேலைவாய்ப்பு இயக்குனரகத்திடம் இருந்து புதிதாக பதிவு மூப்பு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதிவு மூப்பு பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ளது. 835 பேரின் தேர்வுப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இதேபோல், 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, பதிவு மூப்பு பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அதற்குள் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, "தற்போது நடந்து கொண்டிருக்கும் பணிகள் அனைத்தையும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளோம். இனிமேல், கூடுதலாக ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டால், அந்தப் பணியிடங்களை தேர்வு செய்வது தான் பிரச்னையாக இருக்கும்' என்றனர். இதன் காரணமாக, 9,850 ஆசிரியர்களும், தேர்தலுக்கு முன்னதாகவே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

நன்றி : தினமலர்

11 comments:

  1. முதுகலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை.

    இது தவறான தகவல்

    ReplyDelete
  2. aryaa ur cell no pls

    ReplyDelete
  3. abdul ba bed 2007 aug in eng .any news to sms 9994765388.

    ReplyDelete
  4. please send the seniority list for english seniority my email adress muthiah_malar@yahoo.com

    ReplyDelete
  5. please give seniority list for chemistry.My reg no:1998M15495 in tirunelveli Dist.My mail id is ksa_durai@yahoo.com.Please send me.

    ReplyDelete
  6. Hello Mr. Sivakumar,

    Your Blog is excellent. We get good information which is very useful for us. Please update the information about the happenings of TRB everyday. The News on TRB comes only in one paper at a time, available in other cities editions, these news come only in Chennai edition. in other News papers the same news does not appear, also in the same news paper, the news is not av we cant buy each and every newspaper in published Tamil Nadu to get the information, hence we have to look in to your blog, so kind thinking about our jobs and our future, please post the news and happenings on Teachers Recruitment everyday.

    As Government has to recruit around 10,000 Teachers within December, this is the golden opportunity for you to improve the traffic to your blog, by posting good number of articles, and from January to May i hope there wont be any recruitment happening in Tamil Nadu, so at that time you wont find anything related TRB also, so please utilize this opportunity and post everyday about the happenings of the Recruitment works happening in TRB.

    Best Wishes!

    ReplyDelete
  7. No NEW posts. where are you sir.... Help us to know new cut of dates sir...everyday number of visitors visiting your blog... We wil be thankful to you....

    ReplyDelete
  8. No NEW posts. where are you sir.... Help us to know new cut of dates sir...everyday number of visitors visiting your blog... We wil be thankful to you....

    ReplyDelete
  9. No NEW posts. where are you sir.... Help us to know new cut of dates sir...everyday number of visitors visiting your blog... We wil be thankful to you....

    ReplyDelete
  10. TRB SMS SERVICE
    by abdul BA English BCM IN Nellai.
    IF u have sms for news of trb , cut of date, vacancy,counciling and more...................
    PLEASE sms ur no to 9994765388 . any news in u .pls sms.............

    ReplyDelete
  11. i am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
    2010-11 vacancies.....
    Tamil- 533
    Eng- 1333
    Maths-1433
    Phy- 700
    Che- 766
    Bot- 400
    Zoo- 366
    His- 166
    Geo- 133
    Tot- 5830 (But 5818) Nearly.... by abdul ...

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.