About

Sunday 16 May, 2010

ஆயிரக்கணக்கில் காலிப் பணியிடம்: தமிழாசிரியர்கள் வருத்தம்


தமிழக அரசு பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் அதிக அளவில் காலியாக உள்ளது. தமிழக பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் மொழிப் பாடங்களில் அதுவும் தாய்மொழியான தமிழ் பாடங்களுக்கு தருவதில்லை என்பது தமிழாசிரியர்களின் வருத்தம். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி நிலையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நிலையிலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன.


உயர்நிலைப் பள்ளிகளில் நூறு மாணவர்களுக்கு ஒரு பணியிடம் என்ற நிலையில், பல பள்ளிகளில் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பணியிடம் காலியாகவே உள்ளது. இதுதவிர கடந்த பல ஆண்டுகளாக புதிய பணியிடங்களும் உருவாக்கப் படவில்லை. இதனால் பல ஆயிரம் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இதேபோல, மேல்நிலை பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.

கடந்த 1999ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உருவெடுக் கின்றன. இப்பள்ளிகளுக்கு ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கே ஆசிரியர்கள் நியமிக்கின்றனர். தமிழ்ப் பாடத்திற்கும், கலைப் பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்களே நியமிப்பது இல்லை. இதனால் தமிழாசிரியர்கள் பணியிடம் காலியாகவே உள்ளது.  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில துணைபொதுச்செயலாளர் எஸ்.பார்த்திபன் கூறுகையில், அரசு, பள்ளிகளுக்குத் தேவையான தமிழாசிரியர்களையும் நியமித்து மாணவர்களின் மொழித் திறனை அதிகரிக்க வேண்டும்'' என்றார்.

நன்றி   -  தினமலர்                             

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.