முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 921 முதுகலை ஆசிரியர்கள், வேலை வாப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செயும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்து வந்தது. தகுதி வாந்தவர்கள் அழைக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொண்டவர்கள்,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம் .


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.