About

Tuesday 13 July, 2010

தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் 6500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 503 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணையை தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


  

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த 6,503 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரிடமிருந்து பெறப்பட்ட பட்டியலின்படி, 32 மாவட்டங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 188 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த மே 12&ல் தொடங்கி 15&ம் தேதி வரை நடந்தது.இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, முன்னுரிமை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியல், கடந்த 9&ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பிற பாடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வு செய்யப்பட்ட கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் தனித்தனியாக தபால் மூலம் நியமன ஆணை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
நன்றி : தமிழ் முரசு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.