About

Saturday, 10 July 2010

ஆறு பாடப்பிரிவை சேர்ந்த 3,871 பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு :

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று வெளியிட்டது. 6,503 பேரில், முதல் கட்டமாக 3,871 பேரின் பெயர் பட்டியலை பாட வாரியாக அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,503 பட்டதாரி ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. 


அதன்படி, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்திடம் இருந்து 31 ஆயிரத்து 189 பேரின் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டது. அவர்களுக்கு, கடந்த மே மாதம் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இதன்பின், இனசுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல், பாட வாரியாக தயாரிக்கப்பட்டன. இந்நிலையில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவியியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை மட்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலை, இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "ஆறு பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இதர பாடங்களுக்கு, விரைவில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்' என தெரிவித்துள்ளது.


Subject

D.S.E.

D.E.E.

Total

Mathematics

114

1205

1319

Physics

77

768

845

Chemistry

79

761

840

Botany

35

352

387

Zoology

31

330

361

Geography

119

--

119

Total

455

3416

3871

Please click Here for DSE - Department - Maths, Physics, Chemistry, Botany, Zoology and Geography




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.