மதுரை, அக். 4:
ஐகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் பணி கிடைக்காமல் ஆயிரம் ஆசிரியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் காலியாக உள்ள 1064 வட்டார ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கான போட்டி தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் செய்த குழப்பமான முடிவு காரணமாக இரண்டு முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து கடந்த ஜூன்3,4,5 ஆகிய தேதியில் ஆயிரத்து 102 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தேர்வு எழுதிய சிலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை முடிந்து சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆக.30ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட் தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைக்க வில்லை என கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க கோரி சிலர் நேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இது குறித்து ஆசிரியை சுமதி கூறுகையில்; நான் ஏற்கனவே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். ஆசிரியர் பயிற்றுநர் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். இதனை தெரிந்துகொண்ட நிர்வாகம், உங்களுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. இதனால் புதிய ஆசிரியர்களை நாங்கள் நியமித்து கொள்கிறோம் என கூறி கடந்த மே மாதம் பள்ளியை விட்டு நிறுத்தி விட்டனர். இப்பணி கிடைக்கும் என கடந்த 5 மாதமாக காத்திருக்கிறேன். இது வரை பணிக்கான உத்தரவை வழங்கவில்லை. எனது குடும்பம் ஐந்து மாதமாக வருமானம் இன்றி கஷ்டமான நிலையில் உள்ளது என கண்ணீர் மல்க கூறினார்.
ஆசிரியர் ஆல்பர்ட் கூறுகையில்: சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தவுடன் ஒரு வார காலத்தில் பணி நியமன உத்தரவு வழங்கும். ஆனால் இந்த பணியில் மட்டும் கால தாமதம் ஏற்படுத்தி வருகிறது. அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக நாங்கள் வேலையின்றி நடுத் தெருவில் நிற்கிறோம்,“ என்றார்.
நன்றி : தினகரன் ( மதுரை பதிப்பு )
we are expecting the final selection list from trb. is there any related news pls contact ;
ReplyDelete9791968707---- nagarajan..tirupur