About

Tuesday, 11 May 2010

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : முதல்வருக்கு கோரிக்கை

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தொடக்கப்பள்ளி தவிர மொத்தம் 14 ஆயிரத்து 956 பள்ளிகளில் 6 ஆயிரத்து 787 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக கருதப்படுகிறது. 


ஆனால், 6 முதல் +2 வரை கற்பிக்கின்ற உடற்கல்வி ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்வது இல்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க இயலாமல் போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க உடற்பயிற்சி மற்றும் யோகா அவசியம். இதனை கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் வேண்டும்.

பற்றாக்குறையோடு ஆசிரியர் நியமிக்கப்படாமல் இருந்தால் தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழகம் பின்தங்கி விடும்.எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு தர வேண்டுமென முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.