About

Sunday, 3 October 2010

தமிழகத்தில் கட்டாயக் கல்வி சட்டம் அமல் : 15 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க திட்டம்

கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்த தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் 15,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, விரைவில் 15,000 ஆசிரியர்கள் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேற்கண்ட சட்டத்தில் தெரிவித்துள்ளபடி 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விகிதாசாரத்தை பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் என்றால், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன்படி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 4,700 பள்ளிகளில் கணக்கெடுக்கப்பட்டது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் நீங்கலாக, கூடுலாக 8,000 ஆசிரியர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளதுஅதேபோல், தொடக்கப் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கும் 37,486 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் நீங்கலாக 7,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது.கூடுதல் ஆசிரியர்கள் தேவை மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனரகங்கள் தயாரித்துள்ளன. இவை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கும், சம்பளத்துக்கான நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்யும். அரசு அனுமதிவழங்கியதும் விரைவில் மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோல், ஒரு வகுப்பில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் அந்த வகுப்புகளில் உடற்கல்வி, தொழில், ஓவிய ஆசிரியர்கள் ஆகியோர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 6,000 பள்ளிகளில் 18,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.