About

Saturday, 12 June 2010

15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசு நடவடிக்கை

வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம், 14 ஆயிரத்து 900 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 6,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி முடிந்த நிலையில், அடுத்ததாக 6,300 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறைக்கு மேலும் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித்துறைக்கு 1,200 ஆசிரியர்கள், மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 1,400 ஆசிரியர்கள் என 8,600 பட்டதாரி ஆசிரியர்களை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.மொத்தத்தில், 14 ஆயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.முதலில், 6,300 ஆசிரியர்களை தேர்வு செய்துவிட்டு, அதன்பின் 8,600 ஆசிரியர்களை தேர்வு செய்யலாமா அல்லது, அனைத்து பணியிடங்களுக்கான ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்யலாமா என, அரசிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பிற்கு ஏற்ப, தேர்வு செய்யும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.