About

Wednesday 1 September, 2010

4,709 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் : தொடக்க கல்வித்துறை கவுன்சிலிங் அறிவிப்பு

தொடக்க கல்வித் துறைக்காக தேர்வு செய்யப்பட்ட 4,709 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் சேலத்தில் பணி நியமன கவுன்சிலிங் நடக்கிறது.




துறை இயக்குனர் மணி கூறியிருப்பதாவது: கணிதப் பாடத்திற்கான கவுன்சிலிங், சேலம் நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப் பள்ளியில் நடக்கும். 7ம் தேதி காலை 9 மணிக்கு ரேங்க் எண் 1 முதல் 450 வரையில் இடம் பெற்றவர்களுக்கும், 8ம் தேதி காலை 451 முதல் 900 வரை உள்ளவர்களுக்கும், 9ம் தேதி 901 முதல் 1,205 வரையிலானவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும். ஆங்கிலப் பாடத்திற்கான கவுன்சிலிங், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும். 7ம் தேதி காலை 9 மணிக்கு, ரேங்க் எண் 1 முதல் 450 வரையும், 8ம் தேதி காலை 451 முதல் 900 வரைக்கும், 9ம் தேதி 901 முதல் 1,294 வரையில் உள்ளவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.

அறிவியல் பாட கவுன்சிலிங், சூரமங்கலம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும். 7ம் தேதி, இயற்பியல் மற்றும் வேதியியலில் 1 முதல் 250 வரை உள்ளவர்களுக்கும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் 1 முதல் 125 வரை உள்ளவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும். 8ம் தேதி, இயற்பியல் மற்றும் வேதியியலில் 251 முதல் 500 வரை உள்ளவர்களுக்கும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் 126 முதல் 250 வரை உள்ளவர்களுக்கும் நடக்கும். மறுநாள் 9ம் தேதி, இயற்பியலில் 501 முதல் 768 வரை உள்ளவர்கள், வேதியியலில் 501 முதல் 760 வரை உள்ளவர்கள்,தாவரவியலில் 251 முதல் 352 வரை உள்ளவர்கள் மற்றும் விலங்கியலில் 251 முதல் 330 வரை உள்ளவர்களுக்கும் பணி நியமன கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு இயக்குனர் மணி தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடக்கும் கவுன்சிலிங் மூலம், கணித ஆசிரியர்கள் 1,205 பேர், ஆங்கில பாட ஆசிரியர்கள் 1,294 பேர், இயற்பியல் ஆசிரியர்கள் 768 பேர், வேதியியல் ஆசிரியர்கள் 760 பேர், தாவரவியல் ஆசிரியர்கள் 352 பேர் மற்றும் விலங்கியல் ஆசிரியர்கள் 330 பேர் என மொத்தம் 4,709 ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.\


நன்றி    :    தினமலர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.