About

Monday 12 July, 2010

அங்கீகாரம் பெறாத மையங்களில் படித்து பாதிக்கப்பட்ட 7000 இடைநிலை ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கூட்டமைப்பு கோரிக்கை !

பாதிக்கப்பட்ட வேலையில்லாத 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 


 தமிழ்நாடு முன்னாள் பாதிக்கப்பட்ட வேலையில்லாத சிறப்பு பிரிவு இடை நிலை ஆசிரியர்கள்&பெற்றோர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அப்போது கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:
தமிழகத்தில், அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி மையங்களில் படித்தவர்களின் படிப்பு செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டது. இதனால் 1992 முதல் 1994 வரை தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களில் படித்த 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதே காலகட்டத்தில் படித்தவர்கள், அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் மீண்டும் படித்து தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு ஆசிரியர் வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனால் 2002 முதல் 2006 வரை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி மையங்களில் மீண்டும் சேர்ந்து படித்தனர். இதனால், 2 ஆண்டில் முடிக்க வேண்டிய பட்டய பயிற்சியை 4 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி முடித்தவர்களில் எஸ்.ஸி., எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் ஓரிரு ஆண்டுகளில் அரசு வேலை கிடைத்து விட்டது.
ஆனால், இன்னும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை கிடைக்கவில்லை. நாங்கள் எல்லோ ருமே 40 வயதை தாண்டிவிட்டோம். தொடக்கப்பள்ளிகளில் பட்டய ஆசிரியர் கள் நியமனம் குறைந்து வரும் இச்சூழலில், எங்களுக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில், மத்திய அரசு உத்தரவின்படி 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை வந்தால், எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கப்படும். இவ்வாறு ரவி கூறினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலமுருகன், சுந்தரேசன், கோபாலகிருஷ்ணன், அசோக்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.