About

Wednesday 28 July, 2010

1603 ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு !

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், 1603ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை நேற்று ( 27-07-2010 )வெளியிட்டது. 

ஆசிரியர் தேர்வு வாரிய சுட்டி இங்கே 







6,503 பேரில், முதல் கட்டமாக ஆறு பாடங்களுக்கு தேர்வானோரின் பெயர் பட்டியலை கடந்த 09-07-2010 மற்றும் 14-07-2010 அன்று பாட வாரியாக அறிவித்தது . பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 6,503 பட்டதாரி ஆசிரியர்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்திடம் இருந்து 31 ஆயிரத்து 189 பேரின் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டது. அவர்களுக்கு, கடந்த மே மாதம் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இதன்பின், இனசுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல், பாட வாரியாக தயாரிக்கப்பட்டன. இந்நிலையில்,ஆங்கிலம் பாடத்திற்கான  தேர்வுப் பட்டியலை , ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலை, இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் .அனைத்து பாடங்களுக்கும் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதால் ,  தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது . 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.