About

Monday 11 October, 2010

2010-2011 ஆண்டிற்கான 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயார்

சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க உள்ளனர். கூடுதல் பணியிடங்களில் தேவைப்படுவோரை நியமிக்க சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வாங்கியுள்ளது. 

பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககத்தில் 2010 & 2011ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் அரசு அறிவித்தது. அதன்படி பள்ளிக் கல்வியில் 916 முதுநிலை பட்டதாரிகள், 4052 பட்டதாரி ஆசிரியர்கள், 348 உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் 68 பேர் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடக்க கல்வியில் 1766 பட்டதாரி ஆசிரியர்கள், 1743 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் (4052 மற்றும் 1766) 5818 பேர் தற்போது நியமனம் செய்யப்படுகின்றனர். ஏற்கனவே சான்று சரிபார்ப்பு முடித்து (2009&2010) பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 24000 பேரில் மேற்கண்ட 5818 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் எடுத்த கணக்கின்படி கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்ய, அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்தும் மாநில பதிவு மூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டது.  29.12.2009 வரையிலான பட்டியல் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம், மற்றும் வரலாறு, தமிழ், புவியியல் பாடங்களில் பதிவு செய்துள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்டமாக, அடுத்த வாரம் 5818 பேருக்கு கவுன்சலிங் நடக்கிறது. அடுத்த கட்டமாக, கூடுதல் ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் தொடங்கும். இதற்கிடையே, ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 3000 ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

12 comments:

  1. 2010-11 ஆம் கல்வியாண்டில் நிரப்ப வேண்டிய 5818 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படுவது தொடர்பாக மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்த்தலில் பங்கேற்றோர் தவிர மேலும் 2100 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 10 அல்லது 15 நாட்களுக்குள் நடைபெறும் என்று தினத்தந்தியில் நேற்று செய்தி வெளியானது.நேற்று முன்தினம் அடுத்த வாரம் கவுன்சிலிங்-2010-2011 ஆண்டிற்கான 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. which news is true?

    ReplyDelete
  2. Hello Mr. Sivakumar,

    Your Blog is excellent. We get good information which is very useful for us. Please update the information about the happenings of TRB everyday. The News on TRB comes only in one paper at a time, available in other cities editions, these news come only in Chennai edition. in other News papers the same news does not appear, also in the same news paper, the news is not av we cant buy each and every newspaper in published Tamil Nadu to get the information, hence we have to look in to your blog, so kind thinking about our jobs and our future, please post the news and happenings on Teachers Recruitment everyday.

    As Government has to recruit around 10,000 Teachers within December, this is the golden opportunity for you to improve the traffic to your blog, by posting good number of articles, and from January to May i hope there wont be any recruitment happening in Tamil Nadu, so at that time you wont find anything related TRB also, so please utilize this opportunity and post everyday about the happenings of the Recruitment works happening in TRB.

    Best Wishes!

    ReplyDelete
  3. HELLOW SIR

    WHEN IS NEXT TRB EXAIM ?

    ReplyDelete
  4. am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
    2010-11 vacancies.....
    Tamil- 533
    Eng- 1333
    Maths-1433
    Phy- 700
    Che- 766
    Bot- 400
    Zoo- 366
    His- 166
    Geo- 133
    Tot- 5830 (But 5818) Nearly.... by abdul

    ReplyDelete
  5. am abdul . BA English.B.Ed. in nellai. i start SMS service for trb update news . so pls send ur cell no to 9994765388.
    2010-11 vacancies.....
    Tamil- 533
    Eng- 1333
    Maths-1433
    Phy- 700
    Che- 766
    Bot- 400
    Zoo- 366
    His- 166
    Geo- 133
    Tot- 5830 (But 5818) Nearly.... by abdul

    ReplyDelete
  6. அய்யா வணக்கம்!!
    தமிழக அரசின்சமசீர் கல்வியிலயாவது வணிகவியல் (B.Com., B.Ed., )படித்தவர்களுக்கு ஏதாவது வாய்ப்பு கொடுப்பீர்களா?
    -முத்து

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா !
    2010-2011 ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயார் ஆகிவிட்டதா அய்யா?

    எனது மனைவி பதிவு எண் 2005F07390 6/5/1983 11/12/2002 தூத்துக்குடி மாவட்டம்.

    இந்த பட்டியலில் கிடைக்க வாய்ப்பு உண்டா அய்யா?
    நல்ல பதில் கிடைக்கும் என்று காத்து இருக்கிறேன் அய்யா!

    ReplyDelete
  8. sir i m b c candidate ifinish my b.ed in 2006.english major .is it true i' l get job sir.

    ReplyDelete
  9. sir why no comment for the above msg

    ReplyDelete
  10. sir viraivil valieidu enna sir

    ReplyDelete
  11. sir sikiram valieidunga

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.