About

Thursday, 15 April 2010

சமச்சீர் கல்வி, கட்டாய கல்வி திட்டம் வெற்றிபெற 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர்

 தூத்துக்குடி, ஏப். 15
                                 சமச்சீர் கல்வி மற்றும் கட் டாய கல்வித் திட்டங்கள் மூலம் தரமான கல்வி கிடைத்திட மாணவர் & ஆசிரியர் விகிதம் மாற்றி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க ப்பள்ளிகளில் கடந்த 97ம் ஆண்டு வரை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் 29.12.1997 அன்று 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அர சாணை 525 பிறப்பிக்கப்பட்டது.இதற்கு அப்போதே பல்வேறு சங்கங்களும், ஆசிரிய கூட்டணியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசாணை ரத்து செய்யப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு முதல் இந்த அரசாணை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் ஆசிரியர் களின் எண்ணி க்கை பல மடங்கு குறைந்துவிட்டது. தமிழ் வழிக்கல்வியின் தரமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி அதிகரித்துள்ளது. ஏற்கனவே செயல்வழி கல்வி திட்டத்தால் ஆசிரியர்கள் கடும் பணி ச்சுமைக்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது மெட்ரிக்குலேசன் பயிலும் மாணவர்களின் தரத்திற்கு இணையான பாடத்தி ட்டத்தை சமச்சீர் கல்வி மூலம் வழங்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

                                      இத்திட்டத்தால் ஏழை மாணவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியிலேயே தரமான கல்வி கிடைக்கும் என்பதால் பலரும் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.அதேநேரத்தில் தரமான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள சூழ்நி லையில் கடினமானதாக இருக்கும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வரும் மாணவர் & ஆசிரியர் விகிதத்தை 1997க்கு முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

                         புதிதாக தொடக்கப் பள்ளிகளை தொடங்கு வதைவிட ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தர த்தை உயர்த்தி கூடுதலாக வகுப்பறைகள்,   சுகா தாரமான           கழிப் பறைகள், ஆரோக்கியமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரி க்கை விடுக்கி ன்றனர். 

கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு :
                        
                           இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சு.காசி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களைவிட ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் அதிகமாகும். இதனால் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மனஉளச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கல்வியின் தரமும் குறைந்து விட்டது. மாணவர்களிடம் ஒழுக்கமின்மையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் முழு பயனும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்பினால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையை ரத்து செய்து 1997க்கு முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசாணை ரத்து செய்தால் நல்லது ...
நன்றி : தமிழ் முரசு 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.