About

Monday, 10 May 2010

விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி தேவை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தர வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. இவர்களுக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) பெற்றிருக்க வேண்டும் அல்லது முது கலைப் பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மற்றும் பிஎச்.டி., பெற்றிருக்க வேண்டும்.


இதன்படி, 1993ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் எம்.பில்., பட்டம் பெற்றவர் களுக்கு, நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் விதிவிலக்கு கிடையாது. எனவே, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய "முதல் பெஞ்ச்&' விசாரித்தது. நளினி சிதம்பரம், வக்கீல் சுரேஷ் விஸ்வநாத் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "முதல் பெஞ்ச்&' இடைக்கால தடை விதித்தது. அப்பீல் மனுக்களுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

நன்றி    - தினமலர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.