About

Friday 18 February, 2011

அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 836 பேர் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்திக் குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1024 உதவி பேராசிரியர்களை நியமிக்க, கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு, ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி, மதிப்பெண், அனுபவம்,நேர்முகதேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், பல்வேறு பாடங்களுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, 836 உதவி பேராசிரியர்களின் பட்டியலை http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு பதிவு தபாலில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது

சென்னை : பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடுபட்ட பதிவுமூப்புதாரர்களுக்கு, சென்னையில் நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில், 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் இம்மாத இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில், பதிவுமூப்பு விடுபட்ட 783 பேரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அனுப்பி வைத்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. 400க்கும் மேற்பட்டோர் நேற்று அழைக்கப்பட்டனர். மீதியுள்ளவர்களுக்கு, இன்று நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும், 20ம் தேதிக்குள் தேர்வுப் பட்டியலை வெளியிட, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் அறிவித்தபடி, அடுத்த வாரத்தில் பணி நியமனங்களை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.