About

Tuesday, 18 May 2010

ஆசிரியர், மாணவர் விகிதத்தில் மாற்றம் : கல்வித்துறை திட்டம்

தொடக்க, நடுநிலைபள்ளிகளில் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு நடந்து வருகிறது.



தமிழகத்தில் உள்ள 78 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 1.06 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.  இவற்றில், 40 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் பின்பற்றப்படுகிறது. சில பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் கூட இருப்பதில்லை. அந்த வகுப்பிற்கும், ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். இப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, உபரியாக உள்ள ஆசிரியர்கள், வேறு பள்ளிகளில், காலி பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.
மாறும் விகிதம்: இந்நிலையில், ஆசியர் சங்கங்களின் பல ஆண்டு கோரிக்கையான 1:30 என்ற விகிதத்தை நிறைவேற்ற, அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கை; 1:30 விகிதப்படி தவையான ஆசிரியர்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு அலுவலரை நியமித்து ஆய்வு நடக்கிறது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆசிரியர் பணியிட விபரங்களை சேகரித்து வருகிறோம். வரும் கல்வி ஆண்டில், மாணவர் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். வரும் 2011- 12 ம் கல்வி ஆண்டில் 1:30 என்ற விகிதம் அமலுக்கு வரும். ஆகஸ்டில் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

 நன்றி   -    தினமலர் 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.