About

Wednesday 15 September, 2010

நடப்பாண்டில் நியமிக்க வேண்டிய 11 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி விறுவிறுப்பு

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள் 5,300 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2,500 பேர் மற்றும் 500 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்து 800 ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இவற்றில், முதற்கட்டமாக  5,300 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, மற்ற ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த ஆண்டில் தேர்தல் பணிகள் துவங்கிவிடும் என்பதால், புதிய ஆசிரியர்கள் அனைவரையும், இந்த ஆண்டு இறுதிக்குள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      2009-10 கல்வியாண்டிற்கு நியமிக்க வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர் , சிறப்பாசிரியர் , உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இதுவரை தற்காலிக தெரிவு பட்டியல் கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.