About

Tuesday, 27 December 2011

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கானதகுதி தேர்வை தடை செய்யக் கோரி மனு

சென்னை:பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதி தேர்வு நடத்த, தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பி.டி., மற்றும் முதுகலை, பி.எட்., பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
வேலை வாய்ப்பகத்தில், மாநில அளவிலான சீனியாரிட்டிபடி, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 5,932 ஐ நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, அரசு அனுமதியளித்து, கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. எனவே, அந்த, 5,932 காலியிடங்களையும், அப்போது இருந்த விதிகளின்படி நிரப்ப வேண்டும்.

கடந்த ஜூன் 1ம் தேதி வரையிலான பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களையும், அப்போதைய விதிகளின்படி நிரப்ப வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம், 8ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், நியமனங்களை மேற்கொள்வது என, முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விவரங்களையும் அரசு வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு மூலமே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சீனியாரிட்டிபடி, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என, அரசு முடிவெடுத்தது. பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு மூலமே தேர்வு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 20 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். வேலைவாய்ப்பக சீனியாரிட்டிபடி நியமிக்கப்படுவோம் என நம்பியிருந்தோம். தற்போது எங்களுக்கு மறுக்கப்படுகிறது.எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதி தேர்வு அல்லது போட்டி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தக் கூடாது என, உத்தரவிட வேண்டும்.

வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில், எங்கள் சங்க உறுப்பினர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசு மற்றும் பள்ளி கல்வித் துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். 

நன்றி : தினமலர்

Saturday, 12 November 2011

மீண்டும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 2011-12ம் ஆண்டிற்கான 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, 22 September 2011

ஆதி திராவிட நலப்பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு !

2010- 11 ஆம் ஆண்டிற்கான ஆதி திராவிட நலப்பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் 21-09-2011 வெளியிட்டுள்ளது .

http://trb.tn.nic.in/GA2011/21092011/ADW.pdf

Saturday, 17 September 2011

ஆங்கிலம்,கணிதம்,வேதியியல் பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு

ஆங்கிலம், கணிதம், வேதியியல் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது. 

Thursday, 15 September 2011

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு அனுமதி

 
Ahead of the festival season, the Government today announced a 7 per cent hike in the Dearness Allowance of its employees. 

The decision to increase the DA for five million Central government employees and Dearness Relief (DR) for about four million pensioners was taken by the Union Cabinet.The pay hike would be applicable from July 1. The DA for the Government employees would increase from 51 per cent of the basic salary to 58 per cent.
The hike in DA and DR would cost the exchequer annually Rs 7,229 crore, while for the remaining period of the current fiscal the implication would be Rs 4,819 crore, the Information and Broadcasting Minister, Ms Ambika Soni, told reporters.

Monday, 12 September 2011

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 2011 - 12 அரசு அறிவிப்பு

ஆசிரியர்கள் கலந்தாய்வு வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

Friday, 9 September 2011

ஆறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

Tuesday, 30 August 2011

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் அரசு தெளிவு : இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர பணியிடமாகாது

முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 


Tuesday, 23 August 2011

2010 11ம் கல்வியாண்டில் தேர்வான 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!

சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடந்தது.  இதுசம்பந்தமாக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

14 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:  

Sunday, 14 August 2011

900 புதிய ஆசிரியர்கள் நியமனம் அறிவிப்பால் போட்டித் தேர்விற்கு தயாராகும் முதுகலைப் பட்டதாரிகள்

தமிழகத்தில் புதிதாக 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 900 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த கூடுதல் நியமனம் மூலம் அரசுக்கு ரூ. 44 கோடியே 91 லட்சம் கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:

அறிவியல், கணித ஆசிரியர்களை போல நடுநிலை பள்ளிகளில் தமிழாசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கில ஆசிரியர்களைப் போல தமிழ், வரலாறு, புவியியல் பாட ஆசிரியர்களையும் நேரடியாக நியமிக்க வேண்டும் என்று வேலையில்லாத பட்டதாரி தமிழாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக.ராமு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

Wednesday, 3 August 2011

கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 4858 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் கடந்தகல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் இறுதியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலக "சீனியாரிட்டி' பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பணி நியமன உத்தரவு வழங்குவதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால், அனைத்து செயல்பாடும் நின்று போனது. இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக அரசு புதிய உத்தரவிட்டு (அரசாணை எண்: 105) உள்ளது.


Sunday, 10 July 2011

கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவுக்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு

சென்னை, ஜூலை 6: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஷிஃப்ட்-2 பிரிவில் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்கான ஊதியத்துக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி, அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஷிஃப்ட்-2 கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் முதலில் சுயநிதி படிப்புகளாக வழங்கப்பட்டு பின்னர் அரசு உதவி பெறும் படிப்புகளாக மாற்றப்பட்டன.  இந்த ஷிஃப்ட்-2 படிப்புகள் அனைத்திலும் ஆரம்பம் முதல் கௌரவ விரிவுரையாளர்களே நியமிக்கப்பட்டனர்.  


Thursday, 23 June 2011

தி.மு.க., அரசு அறிவித்த 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கேள்விக்குறி !!!

கடந்த, பிப்ரவரி 26ம் தேதி, கருணாநிதி, "965 தனியார் பள்ளிகளுக்கு அரசு மானிய உதவியுடன், 4,851 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், ஜூன் 1ம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும் என்றும், 1990-91 வரை துவங்கப்பட்ட, 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மை அல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவிபெறும் பள்ளிகள்), கூடுதலாக தேவைப்படும், 6,456 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்' என்றும் அறிவித்தார்.

Saturday, 7 May 2011

பொது இடமாறுதல் கவுன்சிலிங்ஆசிரியர் பயிற்றுனர்கள் எதிர்பார்ப்பு !

வட்டார வளமையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. செயலாளர் பிரகாசம் வரவேற்றார். மாநில தலைவர் காசிப்பாண்டியன் பேசினார்.கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் மே மாத இறுதியில் நடைபெறும் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வட்டார வளமையங்களில் இருந்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு இடமாறுதல் ஆகும் போது, வளமையங்களில் ஏற்படும் காலி பணியிடங்களில், வட்டார வள மையங்களுக்குள் மாறும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கான கவுன்சிலிங் வைக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் மோசஸ் டேனியல் நன்றி கூறினார்.

Wednesday, 2 March 2011

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் மே 13ம் தேதிக்கு பிறகே பணி நியமனம்

சென்னை : "புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6,000 பட்டதாரி ஆசிரியர்களும், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. பதிவுமூப்பு அடிப்படையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்திற்காக 1,200 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறைக்கு 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் என, மொத்தம் 6,195 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலை, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.


Friday, 18 February 2011

அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 836 பேர் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்திக் குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1024 உதவி பேராசிரியர்களை நியமிக்க, கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு, ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி, மதிப்பெண், அனுபவம்,நேர்முகதேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், பல்வேறு பாடங்களுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, 836 உதவி பேராசிரியர்களின் பட்டியலை http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு பதிவு தபாலில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது

சென்னை : பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடுபட்ட பதிவுமூப்புதாரர்களுக்கு, சென்னையில் நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில், 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் இம்மாத இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. இந்நிலையில், பதிவுமூப்பு விடுபட்ட 783 பேரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அனுப்பி வைத்தது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. 400க்கும் மேற்பட்டோர் நேற்று அழைக்கப்பட்டனர். மீதியுள்ளவர்களுக்கு, இன்று நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும், 20ம் தேதிக்குள் தேர்வுப் பட்டியலை வெளியிட, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் அறிவித்தபடி, அடுத்த வாரத்தில் பணி நியமனங்களை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Saturday, 29 January 2011

பட்டதாரி ஆசிரியர்கள் ‌சென்னையில் உண்ணாவிரத போராட்டம் !

சென்னை : பட்டதாரி ஆசிரியர்கள் 5,800 பேர், தங்களுக்கு உடனடியாக பணி வழங்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பிப்ரவரி மாத‌ இறுதி்க்குள், 12 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேணடும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

12 ஆ‌யிர‌ம் கா‌லி ப‌ணி‌யிட‌ங்களை உடனடியாக ‌நிர‌ப்ப‌ வ‌லியுறு‌த்‌தி செ‌ன்னை‌யி‌ல் பி.எ‌ட் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் உ‌‌ண்ணா‌விரத‌ போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர்.
த‌மிழக ஆ‌சி‌‌ரிய‌ர் தே‌ர்வு வா‌ரிய‌ம் மூல‌ம் 5 ஆ‌யிர‌த்து 800 ‌பி.எ‌ட் ஆ‌சி‌ரிய‌ர்க‌ளி‌ன் சா‌ன்‌றித‌ழ்க‌ள் அ‌ண்மை‌‌யி‌ல் ச‌ரிபா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் இதுநா‌ள் வரை அவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு ‌நியமன ஆணை வழ‌ங்க‌வி‌ல்லை.
இ‌ந்‌நிலை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட 12 ஆ‌யிர‌ம் கா‌லி ப‌ணி‌யிட‌த்தை ‌பி‌ப்ர‌வ‌ரி‌ இறு‌தி‌க்கு‌ள் ‌நிர‌ப்ப வ‌லியுறு‌த்‌தியு‌‌ம், சா‌ன்‌றி‌த‌ழ் ச‌‌ரிபா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ஆ‌சி‌ரிய‌ர்களை உடனடியாக ப‌ணி‌யில்  ‌நிய‌மி‌க்க கோ‌ரி‌க்கையு‌ம் ‌பி.எ‌ட் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் செ‌ன்னை‌‌யி‌ல் உ‌ண்ணா‌‌விரத‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்‌டு‌ள்ளன‌ர்.

நன்றி : வெப்துனியா


Friday, 14 January 2011

2009 - 10 ஆண்டிற்கான உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு !

                  2009 - 10 ஆண்டிற்கான உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு நேர்முகத்தேர்விற்கான தற்காலிக தெரிவு பட்டியல் 2010 - 11 கல்வி ஆண்டின் இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது ...

RESULTS AFTER C.V. SHORT LISTED CANDIDATES CALLED FOR INTERVIEW
            
            The Teachers Recruitment Board has conducted certificate verification for all the candidates who were applied for the post of Assistant Professors in Government Arts and Science Colleges. In the certificate verification, weightage marks were awarded as per the G.O. 412 Higher Education Department  dated. 7-12-2009. As per the Government Letter No.23846/F2/2009-1 Higher Education Department dated:4-1-2010, candidates were short listed in the ratio of 1:5 for interview on the basis of marks obtained by them in the certificate verification, rule of reservation and other rules laid down by the Government of Tamil Nadu. Calling of candidate for the interview and attending of interview will not give guarantee for the final selection for the said post. Final selection will be made on the basis of the merit cum-communal roster system which will be on the basis of the total marks secured by the candidate, both in the certificate verification and interview. Candidates who are not in receipt of the call letter can attend the Interview by taking print out of their Interview details from this website.
           Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டோர் பட்டியலுக்கான சுட்டி ...