About

Sunday, 14 August 2011

900 புதிய ஆசிரியர்கள் நியமனம் அறிவிப்பால் போட்டித் தேர்விற்கு தயாராகும் முதுகலைப் பட்டதாரிகள்

தமிழகத்தில் புதிதாக 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 900 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த கூடுதல் நியமனம் மூலம் அரசுக்கு ரூ. 44 கோடியே 91 லட்சம் கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 

கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக மாநிலத்தில் உள்ள 100 அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த ஆணையிட்டுள்ளேன்.
நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளிலும் அறிவியல் பிரிவுடன் கலைப்பிரிவும் தொடங்கப்படும். மேலும் நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளில் கூடுதலாக 900 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுவதால் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 44 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அரசின் அறிவிப்பால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனமானது போட்டித் தேர்வு மூலமாகவே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. RTE - 2009 சட்டத்தின் படி ஆசிரியர் நியமனம் போட்டித் தேர்வு மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது . புதிய நியமனம் மட்டுமின்றி கடந்த ஆன்டில் ஏற்பட்ட ஆசிரியர் ஓய்வு மற்றும் காலியிடம் கணக்கில் கொண்டு பணியிடம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது . ஆகையால் முதுகலைப் பட்டதாரிகள் போட்டித் தேர்விற்கு இப்போதே தயாராகி வருகிறார்கள் ...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.