About

Monday 12 September, 2011

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 2011 - 12 அரசு அறிவிப்பு

ஆசிரியர்கள் கலந்தாய்வு வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், அரசு நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 16ம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்குகிறது. 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், 19 மற்றும் 20ம் தேதி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பொதுமாறுதல்கள் வழங்க பள்ளி கல்வித்துறை நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் பொதுமாறுதல்களை எந்தவகையில் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை வருமாறு: 
                           மூன்று வருடங்களுக்கு மேல் அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது என்று பொதுவான ஆணை இருப்பினும் ஆசிரியர்களை பொறுத்தமட்டில் இது கடைபிடிக்கப் படுவதில்லை. இந்த முறை 2011&12ம் கல்வியாண்டிலும் தொடரலாம். ஒரு ஆசிரியருக்கு மாறுதல் தருவதற்காக காரணம் ஏதுமின்றி மற்றொரு ஆசிரியரை மாறுதல் செய்ய கூடாது. மாவட்டங்களில் அனைத்து வகை ஆசிரியர் பணி நிலையிலும் 1.6.2011 அன்று ஏற்படும் காலி பணியிடங்களின் விபர பட்டியலை முதலில் முழுமையான வகையில் தயார் செய்திட வேண்டும். பொதுமாறுதல்கள் தொடக்க கல்வித்துறையை பொறுத்தவரையில்ஒன்றியத்திற்குள் நகராட்சிக்குள்/மாநகராட்சிகள் முதலில் வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும். மாவட்டத்திற்குள் & ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மற்ற அலகுகளுக்கு பரிசீலிக்க வேண்டும். அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம். அரசு உயர், மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் முதலில் வருவாய் மாவட்டத்திற்குள், அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம். உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணையின்படி இடைநிலை ஆசிரியர்கள் மாநில முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும் மாவட்ட மாறுதல் கிடையாது. ஆனால் மாவட்டத்திற்குள் மாறுதல் கோரி மாறுதல் விண்ணப்பம் அளித்து மாறுதல் பெறலாம். 
கடந்த கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மாறுதல் பெற்ற பணியிடத்தில் முழுமையாக ஒரு கல்வியாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். அதே வேளையில் ராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி தங்களின் சொந்த பாதுகாப்பு கருதி மாறுதல் கோருதல், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள், மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அளவிற்கு மாற்று திறனாளிகள், இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மூன்றாண்டு காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், பணி நிரவல் மூலமாக பிற பள்ளிகளுக்கு சென்றவர்கள், விதவைகள், பதவி உயர்வு மூலம் பிற பள்ளிகளுக்கு சென்றுள்ளவர்கள் உள்ளிட்டோர் ஒரு ஆண்டு பணிக்காலத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. 
புகாரின் மீது நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டவர்கள் 2 ஆண்டுகள் கழித்து விண்ணப்பிக்கலாம். ஆயினும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.