
தொடக்கக் கல்வித் துறையில், 5,577 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாவட் டத்திலும் இருந்து தேர்வு பெற்றவர்களுக்கு, அதே மாவட்டத்தில் பணிபுரிய முன்னுரிமை அளித்து, நேற்று ஒரே நாளில் 3,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிய, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 5,577 இடைநிலை ஆசிரியர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப் பட்டனர். சென்னை, தூத்துக்குடி, நெல் லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் காலி பணியிடம் இல்லை. மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது. மாநில பதிவு மூப்பில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், சொந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதே மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங் களுக்கான கவுன்சிலிங், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங் டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் கவுன்சிலிங்கை நடத்தினர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.