About

Sunday 26 July, 2009

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 165 விரிவுரையாளர்கள் போட்டி தேர்வு மூலம் விரைவில் நியமனம்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர், விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், 50 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், டி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.


 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் 91 காலியிடங்கள் இருந்தன. மொத்தம் 87 பேர் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். முதல்வர், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பிரிவுகளில் 50 பேருக்கு பணி இடமாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது. விரும்பிய இடங்களில் இடமாற்றம் கிடைக்காத 37 பேருக்கு, அடுத்த இடமாற்றல் கவுன்சிலிங்கின் போது, அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வழங்கப்படும். இடமாறுதல் உத்தரவுகளை வழங்கி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் இளங்கோவன் பேசுகையில், ""சட்டசபையில், இத்துறையில் 165 விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்தவுள்ளது. மதிப்பெண் அடிப்படையில், 165 பேருக்கான இறுதிப் பட்டியல் எங்களுக்கு கிடைத்தவுடன், அவர்களை நியமிப்போம்,'' என்றார். கவுன்சிலிங்கின் போது இணை இயக்குனர் ரஞ்சனா தேவி, துணை இயக்குனர் பாண்டுரங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.