About

Tuesday 28 July, 2009

தரம் உயர்த்திய பள்ளிகளில் 2,174 ஆசிரியரை நியமிக்க அரசாணை

                தமிழகத்தில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 2,174 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.                     
               தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் புதியதாக இடைநிலை ஆசிரியர்கள் 1,943 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3,209 பேர் உள்பட மொத்தம் 5,166 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்தது.                                           
              அதன்படி, மாவட்ட வாரியாக தொடக்க- நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வருகின்றனர். 
           
              2,174 ஆசிரியரை நியமிக்க அரசாணை:   இதற்கிடையில் 2009-10-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் பணிபுரிய ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 831 பேரை நியமிக்கும் அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.  இத்துடன் 2008-09-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 1005 நடுநிலைப் பள்ளிகளில் 7-ம் வகுப்பில் பணிபுரிய 1005 ஆசிரியர்களும், 2007-08-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 338 நடுநிலைப் பள்ளிகளுக்கு 8-ம் வகுப்பில் பணிபுரிய 338 ஆசிரியர்களும் நியமனம் செய்ய அரசாணை வெளியாகி உள்ளது.  
             
             மொத்தம் 2,174 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியாகி உள்ளது.  

             "அரசு அறிவித்த 3,209 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில், இந்த 2,174 பேர் நியமிக்கப்படுவர். இவர்கள் பாடவாரியாக நியமிக்கப்படுவர். 831 ஆசிரியர்கள் கணிதப் பாடத்துக்கும், 1005 பேர் அறிவியல் பாடத்துக்கும், 338 பேர் ஆங்கிலப் பாடத்துக்கும் நியமிக்கப்படுவர்''  என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.