About

Friday, 31 July 2009

தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத் திட்டம்: தயாரிப்புப் பணிகள் தீவிரம்





தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த திட்டத் தயாரிப்புப் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (சர்வ சிக்சா அபியான் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக உயர்நிலைப் பள்ளிகளில் ‘தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம்’ (ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்சா அபியான்-ஆர்.எம்.எஸ்.ஏ.) செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தரமான கல்வி உறுதி செய்யப்படும். இதற்கான முதற்கட்ட ஆய்வு மற்றும் திட்ட தயாரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்த திட்ட தயாரிப்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மெட்ரிக் பள்ளியில் கடந்த 3 நாட்களாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திட்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பெருமாள்சாமி, இணை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். திட்ட தயாரிப்பு பணி நிறைவு பெற்றதும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அவர் அரசுக்கு பரிந்துரைத்த பின்னர், புதுதில்லியில் உள்ள மனிதவளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் பணி நியமனம் : பார்வையற்றோருக்கு 1 சதவீத நியமனத்தை முழுமையாக அமல்படுத்த அரசு ஆலோசனை


            ஆசிரியர் பணி நியமனத்தில், பார்வையற்றவர்களுக்கான 1 சதவீதத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஆசிரியர் படிப்பை முடித்த பார்வையற்றவர்களை, பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வேலை வாய்ப்பில் பார்வையற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1 சதவீத நியமனத்தை முழுமையாக அமல்படுத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும், பார்வையற்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இது தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. துறைச் செயலர் ராமமோகன ராவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையா, உறுப்பினர் - செயலர் வசந்தி மற்றும் சமூக நலத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பில், பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 சதவீதத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் வசந்தி கூறியதாவது : பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில், தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பிற பாடங்களுக்கு அவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மொத்த பணி நியமனத்தில், 1 சதவீத இடங்களை மூன்று பாடங்களுக்காக நியமிக்க வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கேட்கின்றனர். மூன்று பாடங்களில் முழுக்க, முழுக்க இவர்களையே நியமிக்க முடியாது. இதில், பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.இந்தப் பிரச்னையில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதை, அடுத்து நடைபெறும் ஆசிரியர் நியமனத்தில் அமல்படுத்துவோம். இவ்வாறு வசந்தி கூறினார்

Tuesday, 28 July 2009

தரம் உயர்த்திய பள்ளிகளில் 2,174 ஆசிரியரை நியமிக்க அரசாணை

                தமிழகத்தில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 2,174 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.                     
               தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் புதியதாக இடைநிலை ஆசிரியர்கள் 1,943 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3,209 பேர் உள்பட மொத்தம் 5,166 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்தது.                                           
              அதன்படி, மாவட்ட வாரியாக தொடக்க- நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வருகின்றனர். 
           
              2,174 ஆசிரியரை நியமிக்க அரசாணை:   இதற்கிடையில் 2009-10-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் பணிபுரிய ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 831 பேரை நியமிக்கும் அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.  இத்துடன் 2008-09-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 1005 நடுநிலைப் பள்ளிகளில் 7-ம் வகுப்பில் பணிபுரிய 1005 ஆசிரியர்களும், 2007-08-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 338 நடுநிலைப் பள்ளிகளுக்கு 8-ம் வகுப்பில் பணிபுரிய 338 ஆசிரியர்களும் நியமனம் செய்ய அரசாணை வெளியாகி உள்ளது.  
             
             மொத்தம் 2,174 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியாகி உள்ளது.  

             "அரசு அறிவித்த 3,209 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில், இந்த 2,174 பேர் நியமிக்கப்படுவர். இவர்கள் பாடவாரியாக நியமிக்கப்படுவர். 831 ஆசிரியர்கள் கணிதப் பாடத்துக்கும், 1005 பேர் அறிவியல் பாடத்துக்கும், 338 பேர் ஆங்கிலப் பாடத்துக்கும் நியமிக்கப்படுவர்''  என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவிக்கிறது.

Sunday, 26 July 2009

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 165 விரிவுரையாளர்கள் போட்டி தேர்வு மூலம் விரைவில் நியமனம்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர், விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், 50 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், டி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.


 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் 91 காலியிடங்கள் இருந்தன. மொத்தம் 87 பேர் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். முதல்வர், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பிரிவுகளில் 50 பேருக்கு பணி இடமாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது. விரும்பிய இடங்களில் இடமாற்றம் கிடைக்காத 37 பேருக்கு, அடுத்த இடமாற்றல் கவுன்சிலிங்கின் போது, அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வழங்கப்படும். இடமாறுதல் உத்தரவுகளை வழங்கி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் இளங்கோவன் பேசுகையில், ""சட்டசபையில், இத்துறையில் 165 விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்தவுள்ளது. மதிப்பெண் அடிப்படையில், 165 பேருக்கான இறுதிப் பட்டியல் எங்களுக்கு கிடைத்தவுடன், அவர்களை நியமிப்போம்,'' என்றார். கவுன்சிலிங்கின் போது இணை இயக்குனர் ரஞ்சனா தேவி, துணை இயக்குனர் பாண்டுரங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Saturday, 25 July 2009

1,118 SPECIAL TEACHEARS WILL BE APPOINTED SOON ...

AWr T·¸L¸¥ 1,188 p\TÖp¡VŸ T‚ CPjLÛ[ ŒW“YR¼LÖL UÖŒX A[«XÖ] T‡°™“ TyzV¥ RVÖWÖf Y£f\‰.

1,188 LÖ¦ CPjL·

AWr ÚU¥ŒÛXT·¸L¸¥ 2008-2009-• L¥« B|eh¡V 1,188 p\TÖp¡VŸ LÖ¦ CPjLÛ[ ŒWT T·¸ L¥«†‰Û\ ˜z° ÙNš‰·[‰. CRÁ™X• 731 EP¼L¥« Bp¡VŸ T‚ CPjLº•, 231 K«V Bp¡VŸ T‚ CPjLº•, 135 ÛRV¥ Bp¡VŸ CPjLº•, 91 CÛN Bp¡VŸ T‚ CPjLº• ŒWTTP E·[].

C‰YÛW p\TÖp¡VŸ T‚ CPjL· AÛ]†‰• UÖYyP A[«XÖ] T‡°™“ AzTÛP›¥RÖÁ ŒWTTy| Y‹R].

C‹R ŒÛX›¥, CÚR T‚ A‹RÍÛR ÙLցP CÛPŒÛX Bp¡VŸ T‚ CPjLÛ[ UÖŒX A[«XÖ] T‡°™“ TyzV¥ AzTÛP›¥ ŒV–ehUÖ¿ r¢• ÚLÖŸy| AÛU›¥ J£ YZef¥ E†RW° ‘\‘†R‰. ARÁTzRÖÁ 5577 CÛPŒÛX Bp¡VŸL· UÖŒX T‡°™“ ™X• ÚRŸ°ÙNšVTy| LP‹R YÖW• T‚›¥ ÚNŸ‹R]Ÿ.

UÖŒX T‡°™“

G]ÚY, CÛPŒÛX Bp¡VŸ T‚eh NUUÖL L£RT|• p\TÖp¡VŸ T‚ CPjLº• UÖŒX A[«XÖ] T‡°™“ AzTÛP›ÚXÚV ŒWTTP E·[]. CR¼LÖL p\TÖp¡VŸ LÖ¦ CPjL· TyzV¥ TÖPYÖ¡VÖL ÚYÛXYÖš“ U¼¿• T›¼p†‰Û\›P• YZjLTy|·[‰.

CÛR†ÙRÖPŸ‹‰, AÛ]†‰ UÖYyP ÚYÛXYÖš“ A¨YXLjL· RVÖŸ ÙNš‰ AĐ“• T‡°™“ TyzVÛX ÚYÛXYÖš“ ‰Û\ RÛXÛU A¨YXL• ÙT¼¿eÙLց| UÖŒX A[«XÖ] T‡°™“ TyzVÛX RVÖŸ ÙNš•. Bp¡VŸ ŒVU]†‡¥ R¼ÚTÖ‰ LÛP‘zeLT|YÛR ÚTÖ¥ J£ LÖ¦ CP†‡¼h 5 ÚTŸ GÁ\ ®R†‡¥ ÙTVŸL· T¡‹‰ÛW ÙNšVT|•.

T‡°RÖWŸLºeh GoN¡eÛL

ERÖWQ†‡¼h, 231 LÖ¦ CPjL· A½«eLTy|·[ K«VŸ Bp¡VŸ TR«eh 1,155 ÚTŸL¸Á ÙTVŸL· ÚYÛXYÖš“ A¨YXL• ™X• T¡‹‰ÛWeLT|•. C‹R T‡°™“ TyzV¦¥ ˜R¥ 231 CPjL¸¥ Y£ÚYÖ£eh ÚYÛX fÛPeh•.

J£ CP†‡¼h 5 ÚTŸ ÙTVŸ T¡‹‰ÛW ÙNšVT|YRÖ¥ A‹R 5 ÚT¡¥ J£Y£eh ÚYÛX GÁ¿ RY\ÖL L£‡«PeiPÖ‰. CÛR RY\ÖL TVÁT|†‡ HUÖ¼¿• CÛP†RWLŸL¸P• T‡°RÖWŸL· LY]UÖL C£ehUÖ¿• ÚYÛXYÖš“ T›¼p†‰Û\ A‡LÖ¡L· GoN¡eÛL «|†‰·[ÖŸL·.

i|R¥ Bp¡VŸL· ŒVU]•

CR¼fÛP›¥, ÙRÖPeLeL¥« ‰Û\›¥ “‡RÖL ÚU¨• 2 B›W• CÛPŒÛX Bp¡VŸL· T‚ CPjLÛ[•, T·¸eL¥«† ‰Û\›¥ 300 ˜‰ŒÛX TyPRÖ¡ Bp¡VŸ CPjLÛ[•, 1,900 TyPRÖ¡ Bp¡VŸ LÖ¦ CPjLÛ[• ŒW“• T‚›¥ Bp¡VŸ ÚRŸ° YÖ¡V• ˜•˜WUÖL D|Ty|·[‰. ˜Á“ NÖÁ½R² N¡TÖŸ“ ÙNšVTyP TÛZV TyzV¥L¸¥ C£‹‰ Bp¡VŸL· ÚRŸ° ÙNšVTP E·[ÖŸL·.

C‰ Uy|–Á½ AWr LÛX A½«V¥ L¥©¡L¸¥ ÚU¨• B›W• «¡°ÛWVÖ[ŸLÛ[ ŒV–TR¼LÖ] T‚• ˜µ®op¥ SP‹‰ Y£f\‰. C‹R T‚ÛV 2 UÖR†‡¥ ˜zeL Bp¡VŸ ÚRŸ° YÖ¡V• ‡yP–y|·[‰

Thursday, 23 July 2009

அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் காலியிடம்: விரைவில் 1000 பேர் நியமனம்

அரசு பள்ளிகளில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களில் விரைவில் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2007-08 மற்றும் 2008-09ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு சான்‌றித‌ழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்றவர்களில்1,156 பேர் பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 250 பேர் பணியில் சேரவில்லை.

இந்த இடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இன்றும், நாளையும் சான்‌றி‌த‌ழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக 936 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர கடந்த 2007-08ஆம் ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கு ஏற்பட்ட ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Wednesday, 22 July 2009

புதிதாக நியமனம் செய்யப்படும் 6500 பட்டதாரி ஆசிரியர்களின் விவரம்

தமிழ்நாட்டில் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 6 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் . பாடவாரியாக நியமிக்கப்படும் ஆசிரியர்களிண் எண்ணிக்கை விவரம் கொடுக்கபட்டுள்ளது.


SCHOOL EDUCATION :
          
   1. P.G. ASSISTANT (1,474 ) :

           
                      Promotion                  -      743
           Direct Recruitment    -      731

   2. B.T ASSISTANT ( 4,771 ) :

 
          
Promotion                  -      1,477
           Direct Recruitment    -      3,294  ( Subject : English -793 , Maths - 840 ,                                                                                              science -  1,217 , Tamil & History  )

  
ELEMENTARY EDUCATION :



           B.T ASSISTANT ( 3,209 )   :
 
          
Promotion                  -      1,477
           Direct Recruitment    -      3,294  ( Subject : English -962 , Maths - 962
, Science - 1,285  )

         SECONDARY GRADE TEACHERS    -  1,943

        
   


Monday, 20 July 2009

பள்ளிக் கல்வித்துறையில் 12,000 ஆசிரியர் நியமனம் எப்போது: பழைய பட்டியலில் இருந்தே தேர்ந்தெடுக்க முடிவு

பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, விரைவில் துவங்க உள்ளது. இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்துவிட்டதால், அந்தப் பட்டியலில் இருந்தே, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கடந்த 15ம் தேதி சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் நியமனம் செய்யப்படுவர்' என அறிவித்தார்.


இதையடுத்து, துறை வாரியாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. ஏற்கனவே, ஒவ்வொரு துறை வாரியாக புதிய ஆசிரியர்களை தேர்வு செய்தபோது, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் வேலை வாய்ப்பு இயக்குனரகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியலைப் பெற்று, அதில் முதல் நிலையில் இருந்தவர்களைத் தேர்வு செய்தது. ஐந்து பேரில் ஒருவர் வேலை வாய்ப்பு பெற்றுவிட்ட நிலையில், பதிவு மூப்பு அடிப்படையில் மீதம் நான்கு பேர் இருக்கின்றனர். இவர்களில் இருந்து, பதிவு மூப்புப்படி ஒருவரை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், தேர்வுப் பணிகள் விரைவாக முடியும். இப்படி, துறை வாரியாக தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பெயர்ப் பட்டியலை, அந்தந்த துறைகளிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பின் பணி நியமன கவுன்சிலிங் நடக்கும்.


தகுதி வாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஓரிரு நாளில் துவக்கி, ஆகஸ்ட் 20ம் தேதிக்குள், தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஒப்படைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் 10ம் தேதிக்குள்ளாகவோ புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு அனைத்து துறைகளும் திட்டமிட்டுள்ளன. கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ளன. செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடும். அதற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும்

Friday, 17 July 2009

ஏ.இ.ஓ(A.E.E.O)., நேரடி நியமனத்திற்கு ஜூலை 20 முதல் விண்ணப்பம்

உதவித் துவக்கக் கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் வினியோகிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 67 உதவி துவக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற அக்டோபரில் நடக்க உள்ளது. இளங்கலை பட்டத்துடன் பி.எட்., படித்தவர்கள் 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூலை 20 முதல் பெற்று ஆக. 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் விலை ரூ. 50. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்துடன் ரூ. 300க்கான டிமாண்ட் டிராப்டை (தாழ்த்தப் பட்டோருக்கு ரூ. 150), "ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை' என்ற முகவரிக்கு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

Thursday, 16 July 2009

இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

                        சென்னை: ""பள்ளிக் கல்வித் துறையில், நடப்பாண்டில் 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர்,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்தபோது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 6,469 ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 5,166 ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் 165 விரிவுரையாளர்கள், சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிப் பள்ளிகளில் 258 ஆசிரியர்கள் என, மொத்தம் 12 ஆயிரத்து 58 ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்படுவர். 831 ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 46 கோடி ரூபாய் செலவில் நாற்காலி, மேஜைகள் வழங்கப்படும். இதன் மூலம், ஆறரை லட்சம் மாணவர்கள் பயனடைவர். அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக, குடிநீர் சுத்திகரிப்பு கொள்கலன் வழங்கப்படும்.


பெண் கல்வி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, வாழ்வியல் திறன் பயிற்சி, கல்விச் சுற்றுலா, கல்வி விழிப்புணர்வு பயிற்சிகள் போன்றவை 15 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக, நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி பாடப் புத்தகம் வழங்கப்படும். இத்திட்டம், படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால், ஆறு லட்சத்து 55 ஆயிரத்து 614 மாணவ, மாணவிகள் பயனடைவர்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவிகள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர ஊக்குவிக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு அவர்களது பெயரில் 3,000 ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்யப்படும். நடப்பு கல்வியாண்டில் இருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் பணியாற்றும் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள், அவர்களது விருப்பத்தின் படி பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றம் செய்ய வழிவகை செய்யப்படும்.


அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், மாவட்டங்களில் சுற்றுச்சூழல் சம்பந்தமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு முதுகலை ஆசிரியர் (தாவரவியல் - உயிரியல்) வீதம் 32 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் ஒரு உதவி இயக்குனர் பணியிடமும் ஏற்படுத்தப்படும் - THANKS TO DINAMALAR

Sunday, 12 July 2009

இடைநிலை ஆசிரியர் தேர்வு: அடுத்த மாதம் நடக்க வாய்ப்பு

"அரசு அறிவித்துள்ள 2,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், அடுத்த மாதம் நடக்க வாய்ப்புள்ளது' என, தமிழக தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்த ஏ.பி.எல்., (செயல்வழிக் கற்றல்) திட்ட கற்பித்தல் அட்டைகளில், சில மாறுதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாதம், இரண்டு வார புத்தாக்கப் பயிற்சி, 10 மையங்களில் அளிக்கப்படுகிறது. மேலும், சிறந்த பள்ளிகளிலும் அவர்கள் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில், மொத்தம் 7,000 நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், கடந்தாண்டு 2,200 பள்ளிகளுக்கு, ஐந்து லேப்-டாப் கம்யூட்டர் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக்கு மூன்று வீதம், 2,500 நடுநிலைப்பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அடுத்தாண்டு முதல், நடுநிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு ஆசிரியரிடமும், ஒரு லேப்-டாப் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில், மேலும் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 2,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில சீனியாரிட்டி அடிப்படையில் 2,000 இடைநிலை ஆசிரியர்கள், அடுத்த மாதம் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறினார் - தினமலர்

Friday, 10 July 2009

இடைநிலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் துவங்கியது ஒரே நாளில் 3,000 பேருக்கு பணி ஒதுக்கீடு


தொடக்கக் கல்வித் துறையில், 5,577 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாவட் டத்திலும் இருந்து தேர்வு பெற்றவர்களுக்கு, அதே மாவட்டத்தில் பணிபுரிய முன்னுரிமை அளித்து, நேற்று ஒரே நாளில் 3,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிய, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 5,577 இடைநிலை ஆசிரியர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப் பட்டனர். சென்னை, தூத்துக்குடி, நெல் லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் காலி பணியிடம் இல்லை. மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது. மாநில பதிவு மூப்பில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், சொந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதே மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங் களுக்கான கவுன்சிலிங், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங் டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் கவுன்சிலிங்கை நடத்தினர்

தமிழக ஆசிரியர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி! ஆயிரம் பேர் நியமனம் செல்லாது என உத்தரவு


தமிழக அரசு நடத்திய சிறப்புத் தேர்வில் 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற 906 பேரை அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. அவர்களின் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 1,714 பேர் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2008ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுவோரே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்றும் விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்தவர்களின் பட்டியலை வெளியிடும் போது, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை, தமிழக அரசு 35 சதவீதமாகக் குறைத்தது. இதனால், ஏராளமானவர்கள் பாஸ் ஆகும் நிலைமை உருவானது.



இதை எதிர்த்து தமிழ்நாடு கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.



பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிறப்புத் தேர்வு எழுதிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,714 பேரில் 808 பேர் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மட்டுமே நிரந்தர ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள். மீதமுள்ள 906 பேரும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படுவர். எனவே, அரசுப் பள்ளிகளில் அவர்களை நிரந்தரப் பணிக்கு நியமிக்க முடியாது. அதற்கு தகுதியற்றவர்களாக அவர்கள் கருதப்படுவர்.



சிறப்புத் தேர்வில் முதலில் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, அறிவித்த தமிழக அரசு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றியுள்ளது. இதில் 35 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது எனக் கூறியுள்ளது. தேர்வு நடந்த பின், முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் தான், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு தன்னிச்சையானது, நியாயமற்றது. அதனால், 35 சதவீதமாக குறைத்த தமிழக அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், தகுதி பெற்ற 906 பேரின் நியமனமும் செல்லாது. இருப்பினும், காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாநில அரசு புதிதாக தேர்வு நடத்தலாம். ஐகோர்ட்டில் கொடுத்த உறுதி மொழிகளின் அடிப்படையில், இந்தத் தேர்வை நடத்தலாம்.



கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய சிறப்புத் தேர்வில் 35 சதவீதத்திற்கு அதிகமாக, அதேநேரத்தில், 50 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள், அரசு புதிதாக நடத்தும் தேர்வில் பங்கேற்கலாம். அவர்கள், பி.எட்., படித்திருக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த சலுகையும் ஒரே ஒரு முறை மட்டுமே அளிக்கப்பட வேண்டும். அவர்கள் ஏற்கனவே பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்திருப்பதால், இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. தமிழக அரசு புதிதாக நடத்தும் தேர்வை, விளம்பரங்கள் வெளியிட்டு, அதன்மூலம் விண்ணப்பங்கள் பெற்று நடத்தலாம். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படும் நபர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கலாம். மேலும், இந்தப் பதவிகளுக்கான நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையும் அமலாகும் என்றனர். -தினமலர்