சென்னை : வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 வட்டார வள மைய பயிற்றுனர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது. பணி நாடுனர்களின் திருத்திய பட்டியல், கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வாகியுள்ள பணி நாடுனர்களுக்கு, வரும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.
Saturday, 29 May 2010
Friday, 28 May 2010
தொடக்க கல்வி துறையில் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு பரிந்துரை !
அரசு நடுநிலை பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர் பணி இடங்களை பதவி உயர்வு மட்டுமின்றி நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பலாம் என அரசுக்கு தொடக்க கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது ( இதுவரை தொடக்க கல்வி துறையில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர் பணி இடங்கள் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமே நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது )
மேலும் தகவல் அறிய தினத்தந்தி சுட்டி இங்கே ...
Tuesday, 18 May 2010
ஆசிரியர், மாணவர் விகிதத்தில் மாற்றம் : கல்வித்துறை திட்டம்
தொடக்க, நடுநிலைபள்ளிகளில் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு நடந்து வருகிறது.
Sunday, 16 May 2010
ஆயிரக்கணக்கில் காலிப் பணியிடம்: தமிழாசிரியர்கள் வருத்தம்
தமிழக அரசு பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் அதிக அளவில் காலியாக உள்ளது. தமிழக பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம் மொழிப் பாடங்களில் அதுவும் தாய்மொழியான தமிழ் பாடங்களுக்கு தருவதில்லை என்பது தமிழாசிரியர்களின் வருத்தம். உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி நிலையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நிலையிலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன.
Thursday, 13 May 2010
இடைநிலை ஆசிரியர்கள் 1,700 பேர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் தகவல்
''தமிழகம் முழுவதும் 1,700 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். தற்போது நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் முடிந்தவுடன் உடற்கல்வி, தையல், இசை, ஓவிய ஆசிரியர் பணி நியமனம் நடத்தப்படும்,'' என்று ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் சங்கர் தெரிவித்தார்.
கோவையில் நடந்த பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் சங்கர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை மற்றும் அரசு சார்ந்த சிறப்பு கல்வி நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 32 மாவட்ட ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை தொகுக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும்.
மேலும் படிக்க தினமலர் சுட்டி click here
நன்றி - தினமலர்
Wednesday, 12 May 2010
6,322 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் : இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஆரம்பம்:மீண்டும் வாய்ப்பு கிடையாது
தமிழகத்தில் விரைவில் நியமிக்கப்படும் 6,322 பட்டதாரி ஆசிரியர்களுக்குஇன்று (12ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்புபணி நடக்கிறது. சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்குமீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம்உத்தரவிட்டுள்ளது.
Tuesday, 11 May 2010
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : முதல்வருக்கு கோரிக்கை
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குமாறு முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. | |
. | |
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தொடக்கப்பள்ளி தவிர மொத்தம் 14 ஆயிரத்து 956 பள்ளிகளில் 6 ஆயிரத்து 787 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக கருதப்படுகிறது. |
நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கல்வித் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
அரசு நடுநிலைப்பள்ளிகளில் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்கல்வியை வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Monday, 10 May 2010
விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி தேவை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தர வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. இவர்களுக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) பெற்றிருக்க வேண்டும் அல்லது முது கலைப் பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மற்றும் பிஎச்.டி., பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி, 1993ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் எம்.பில்., பட்டம் பெற்றவர் களுக்கு, நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் விதிவிலக்கு கிடையாது. எனவே, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய "முதல் பெஞ்ச்&' விசாரித்தது. நளினி சிதம்பரம், வக்கீல் சுரேஷ் விஸ்வநாத் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "முதல் பெஞ்ச்&' இடைக்கால தடை விதித்தது. அப்பீல் மனுக்களுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
நன்றி - தினமலர்
Monday, 3 May 2010
GRADUATE ASSISTANTS 2009-10 CERTIFICATE VERIFICATION DETAILS RELEASED BY TRB
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
Teachers Recruitment Board was entrusted with the task of recruiting Graduate Assistant for Middle/High/Higher Secondary Schools for the year 2009-10 to be appointed in various departments viz. Directorate of School Education, Directorate of Elementary Education etc., based on employment exchange registration seniority.
Teachers Recruitment Board has issued indents to the Commissioner of Employment and Training, Chennai-32 to sponsor the list of eligible candidates in the ratio of 1:5 for the subjects Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, History and Geography.
verify your seniority details click here
SUBJECT WISE CUT-OFF SENIORITY NOMINATED BY EMPLOYMENT OFFICE
SUBJECT WISE CUT-OFF SENIORITY NOMINATED BY EMPLOYMENT OFFICE
click here to view the details
Sunday, 2 May 2010
ஆசிரியர் பயிற்றுனர் எழுத்துத் தேர்வு : 'கீ' விடைத்தாளை வெளியிடகோர்ட் உத்தரவு
ஆசிரியர் பயிற்றுனர் எழுத்துத் தேர்வு : 'கீ' விடைத்தாளை வெளியிட உத்தரவு
சென்னை : 'வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனருக்கான எழுத்துத் தேர்வின் கீ விடைத்தாளை, நிபுணர் குழு ஆய்வு செய்த பின், அந்த கீ விடைத்தாளை வெளியிட வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு ... click here
6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நான்கு நாள் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது :
சென்னை : 'வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு ... click here
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)
Related Blog List
-
-
-
-
-
-
G.O No. 116 April 9, 201212 years ago
-