About

Thursday, 29 April 2010

6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, ஏப்.28: புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு, கடந்த 2009-ல் அறிவித்தது. 1:5 விகிதாசாரத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது.இந்த 32 ஆயிரம் பேருக்கு மே முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகளில் பணிக்குச் சேருவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.6,000 பணியிடங்களுக்காகப் பெறப்பட்டுள்ள 32 ஆயிரம் பேரின் மூப்பு அடிப்படையிலான பெயர் பட்டியல் h‌t‌t‌p:‌w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.அதேபோல முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்றவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கும் மே முதல் வாரத்தில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தில் சுமார் 8,900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.இதுதொடர்பான அரசாணை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி   :   தினமணி

Wednesday, 28 April 2010

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு புகார் எதிரொலி : 'KEY ANSWER' ஐ ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சரிவர திருத்தப்படவில்லை என அதிகமான புகார்கள் வந்ததையடுத்து, 'கீ ஆன்சரை' சரிபார்க்க நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி புதிய, 'கீ ஆன்சரை' வெளியிட தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்திற்காக 1,064 வட்டார வள மைய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தியது. இதில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 'அப்ஜக்டிவ்' வகையில், பாடத்திற்கு 110 மதிப்பெண்கள், கல்விக்கு 30 மதிப்பெண்கள் மற்றும் பொது அறிவு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் கள் மதிப்பீடு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்த்தலுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, கடந்த 2ம் தேதி, தனது இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தேர்வு முடிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மிகச் சரியான முறையில் விடை அளித்தும், எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, கணிதத்தை முக்கிய பாடமாகக் கொண்டு தேர்வெழுதியவர்களுக்கு, 20 முதல் 25 மதிப்பெண்கள் வரை குறைவாக வந்ததாக புலம்பினர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நூற்றுக்கணக்கானோர் புகார் தெரிவித்து, தங்களது விடைத்தாள்களை மீண்டும் சரிபார்த்து, முடிவை வெளியிட வேண்டும் என கோரினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில், கேள்விகளுக்குரிய, 'கீ ஆன்சரை' சரிபார்த்து, அறிக்கை வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'கீ ஆன்சரை' ஆய்வு செய்யும் பணியில், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விரைவில், தங்கள் அறிக்கையை, தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்படி புதிய, 'கீ ஆன்சரை' இணையதளத்தில் வெளியிட, தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்

Saturday, 24 April 2010

அரசு கல்லூரிகளில் 1024 ஆசிரியர்கள் நியமனம்:உயர்கல்வித் துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 60 சதவீதமும், பல்கலையில் 50 சதவீத அளவிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்லூரிகளில் மட்டும் 2,594 காலிபணியிடங்கள் இருக்கின்றன. பல்கலை, கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு பல சட்டபூர்வமான தடைகளை கடக்க வேண்டியுள்ளது. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1024 பேரை நியமிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்பணி இரண்டு மாதங்களில் நிறைவு பெற்று நியமனம் செய்யப்படுவர்.

 மேலும் படிக்க தினமலர் சுட்டி கீழே ... 

Wednesday, 21 April 2010

அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர் நியமிக்க அரசு முன் வர வேண்டும் : தமிழாசிரியர் கழக மாநிலத்தலைவர் வேண்டுகோள்

772 மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை அரசு உருவாக்கி, பணி நியமனம் செய்ய வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரம், நடுநிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 300 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பணி நியமனத்தில் பதவி உயர்வு மூலம் 75 சதமும், 25 சதம் நேரடியாகவும் பணி நியமிக்கப்பட்டு வந்தது. இதில், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணி நியமனம் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்

மேலும் படிக்க தினமலர் சுட்டி ...

அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர் நியமிக்க அரசு முன் வர வேண்டும்  

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல்: ஏப்ரல் 29-க்குள் விண்ணப்பிக்கக் கெடு :

சென்னை, ஏப்.20: பணியிட மாறுதல் கோரும் பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் 

மேலும் படிக்க தினமணி சுட்டி ...

Tuesday, 20 April 2010

ஆசிரியர் பணி தேர்வு கேள்விகளுக்குரிய விடைகளை வழங்கக் கோரி ஐகோர்ட்டில் மனு ! விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா !

மதுரை : வட்டார வள ஆசிரியர் பணி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்குரிய சரியான விடைகளை வழங்கக் கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மேலும் தகவல் அறிய ... தினமலர் சுட்டி 


Saturday, 17 April 2010

2010-11 ஆண்டின் ஆசிரியர் நியமனம்

  • ''இந்த கல்வியாண்டில் மட்டும் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என தமிழக கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்
  •  2010 -11 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை - 1ல் 28 பணியிடங்கள் உட்பட முதுகலை ஆசிரியர்கள் 916 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,818 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள் 358 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,743 பேர், சிறப்பாசிரியர்கள் 68 பேர் என மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
  • 228 புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும். 218 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கு 2,412 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்
  • பணியில் இருக்கும் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியில் நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2010-11ம் ஆண்டில், 250 தகுதி வாய்ந்த நபர்கள் இளநிலை உதவியாளர்களாகவும், 27 பேர் தட்டச்சர்களாகவும் பணி அமர்த்தப்படுவர்

Friday, 16 April 2010

நட‌ப்பா‌ண்டி‌ல் 8,903 ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் பு‌திதாக ‌நியமன‌ம்: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு



நட‌ப்பா‌ண்டி‌ல் அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் பு‌திதாக 8,903 ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ள் நேரடியாக ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று ப‌ள்‌‌ளி‌‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ள்‌ளி‌க் க‌ல்வித்துறை மா‌னிய‌க் கோ‌ரி‌க்கை ‌மீதான ‌விவாத முடி‌வி‌ல் இதனை அமை‌ச்‌ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு அ‌றி‌‌வி‌த்தா‌ர்.

திரு‌ப்பூ‌ர், பெர‌ம்பலூ‌ரி‌ல் பு‌தியதாக மாவ‌ட்ட தொட‌க்க க‌ல்‌வி அலுவலக‌ம் அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ஸ்ரீ‌வி‌ல்‌லிபு‌த்தூ‌ரி‌ல் மாவ‌ட்ட க‌ல்வி அலுவலகம் பு‌திதாக தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Thursday, 15 April 2010

சமச்சீர் கல்வி, கட்டாய கல்வி திட்டம் வெற்றிபெற 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர்

 தூத்துக்குடி, ஏப். 15
                                 சமச்சீர் கல்வி மற்றும் கட் டாய கல்வித் திட்டங்கள் மூலம் தரமான கல்வி கிடைத்திட மாணவர் & ஆசிரியர் விகிதம் மாற்றி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க ப்பள்ளிகளில் கடந்த 97ம் ஆண்டு வரை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் 29.12.1997 அன்று 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அர சாணை 525 பிறப்பிக்கப்பட்டது.இதற்கு அப்போதே பல்வேறு சங்கங்களும், ஆசிரிய கூட்டணியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசாணை ரத்து செய்யப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2001ம் ஆண்டு முதல் இந்த அரசாணை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் ஆசிரியர் களின் எண்ணி க்கை பல மடங்கு குறைந்துவிட்டது. தமிழ் வழிக்கல்வியின் தரமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி திட்டம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி அதிகரித்துள்ளது. ஏற்கனவே செயல்வழி கல்வி திட்டத்தால் ஆசிரியர்கள் கடும் பணி ச்சுமைக்கு ஆளாகி உள்ள நிலையில் தற்போது மெட்ரிக்குலேசன் பயிலும் மாணவர்களின் தரத்திற்கு இணையான பாடத்தி ட்டத்தை சமச்சீர் கல்வி மூலம் வழங்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

                                      இத்திட்டத்தால் ஏழை மாணவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியிலேயே தரமான கல்வி கிடைக்கும் என்பதால் பலரும் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.அதேநேரத்தில் தரமான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள சூழ்நி லையில் கடினமானதாக இருக்கும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வரும் மாணவர் & ஆசிரியர் விகிதத்தை 1997க்கு முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

                         புதிதாக தொடக்கப் பள்ளிகளை தொடங்கு வதைவிட ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தர த்தை உயர்த்தி கூடுதலாக வகுப்பறைகள்,   சுகா தாரமான           கழிப் பறைகள், ஆரோக்கியமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரி க்கை விடுக்கி ன்றனர். 

கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு :
                        
                           இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சு.காசி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களைவிட ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் அதிகமாகும். இதனால் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மனஉளச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் கல்வியின் தரமும் குறைந்து விட்டது. மாணவர்களிடம் ஒழுக்கமின்மையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் முழு பயனும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரசு விரும்பினால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையை ரத்து செய்து 1997க்கு முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசாணை ரத்து செய்தால் நல்லது ...
நன்றி : தமிழ் முரசு 

Thursday, 8 April 2010

ஆசிரியர் தேர்வு வாரிய விடைத்தாள் திருத்துவதில் குளறுபடியா? தேர்வில் பங்கேற்றோர் வேதனை

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை எழுதியவர்கள், விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்களாக நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 1056 பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க இத்தேர்வு, கடந்த பிப். 14ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஏப். 2ம் தேதி இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். பலர், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைவான மதிப்பெண்ணே வழங்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர். இத்தேர்வில் மொத்த மதிப்பெண் 150. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு வினாக்களுக்கு 110 மதிப்பெண்ணும், பொது அறிவுக்கு 10, கல்வி உளவியல் பாட வினாக்களுக்கு 30 மதிப்பெண்ணும் வழங்கப்படும். இத்தேர்வை பொறுத்தவரை, தேர்வு எழுதி முடிந்ததும் விடைத்தாளின் நகல் ஒன்று அவர்கள் கைவசமே இருக்கும். இதனால் தாங்கள் எழுதிய விடையை அவர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். அதன்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு 130 முதல் 140 வரை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு 90 முதல் 100 வரையே கிடைத்துள்ளது.

இத்தேர்வுக்கென பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பலர் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிறுவனங்களிலும் பலர் எழுதிய விடைத்தாளை காட்டி திருத்தம் செய்திருந்தனர். அவர்களுக்கும் மதிப்பெண் குறைவாகவே வந்துள்ளது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''கணிதபாடத்தில் 110 மதிப்பெண்ணுக்கு மட்டுமே விடைத் தாளை திருத்தியுள்ளனர். மீதியுள்ள 40 மதிப்பெண்ணையும் விட்டுவிட்டனர் என தெரிகிறது. ஏனெனில் கணிதத் தேர்வு எழுதிய பெரும்பாலானோருக்கு அதிகபட்சமே 103 மதிப்பெண் வரைதான் கிடைத்துள்ளது. இதேபோல தமிழ்ப் பாடம் எழுதியவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளன,'' என்றார்.

தேர்வெழுதிய மற்றொருவர் கூறுகையில், ''நான் பயிற்சி பெற்ற மையத்தில் விடைத்தாள் மாதிரியை காட்டி திருத்தம் செய்தபோது, 130 மதிப்பெண் வரை கிடைக்கும் என்பதால், மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் 117 மதிப்பெண்ணே கிடைத்துள்ளது. இதனால் வெறுத்துவிட்டேன். இதேபோல பலர் குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இதனால் பலர் கோர்ட்டுக்கு செல்லும் முடிவில் உள்ளோம்,'' என்றார்.

THANKS TO :   DINAMALAR