தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் தகுதி வாய்ந்த 3,000 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்,'' என்று துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் பலர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் நிலையில், பாடவாரியாக உள்ள காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும், 3,000 இடைநிலை ஆசிரியர்கள், பதவி உயர்வு செய்யப்படுவர். தொடக்க கல்வித்துறையில் இருந்து, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் கேட்டு 3,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத் துள்ளனர்.
அவர்களுக்கு, துறை சார்பில் என்.ஓ.சி., வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, துறை மாறுதல் செய்வதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் மேற்கொள்ள உள்ளது. இதையடுத்து ஏற்படும் காலி பணியிடங்கள், பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் முலம் நிரப்பப்படும் என்று, துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Related Blog List
-
-
-
-
-
-
G.O No. 116 April 9, 201212 years ago
-
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.