About

Saturday, 7 May 2011

பொது இடமாறுதல் கவுன்சிலிங்ஆசிரியர் பயிற்றுனர்கள் எதிர்பார்ப்பு !

வட்டார வளமையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. செயலாளர் பிரகாசம் வரவேற்றார். மாநில தலைவர் காசிப்பாண்டியன் பேசினார்.கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் மே மாத இறுதியில் நடைபெறும் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வட்டார வளமையங்களில் இருந்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு இடமாறுதல் ஆகும் போது, வளமையங்களில் ஏற்படும் காலி பணியிடங்களில், வட்டார வள மையங்களுக்குள் மாறும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கான கவுன்சிலிங் வைக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் மோசஸ் டேனியல் நன்றி கூறினார்.